பொண்ணு மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு.. எதுவுமே சரியா செய்யலையாம்.. கடுப்பில் உச்ச நடிகர்?

By Staff

சென்னை: கணவர் பேச்சைக் கேட்காமல் தன்னோட இஷ்டத்துக்காக கணவரை தூக்கி எறிந்து விட்டு லட்சியத்தை அடைய போகிறேன் என உச்ச நடிகரின் மகள் சொல்லி விட்டு புடுங்கினது பூராவும் தேவையில்லாத ஆணி தான் என தந்தைக்கு தெரிந்த நிலையில், ரொம்பவே கடுப்பாகி விட்டாராம்.

சொன்ன தேதியில் படத்தை முடித்து விட்டு ரிலீஸ் செய்து விடுவேன் என்கிற முதல் வாக்குறுதியை மகள் தந்த நிலையில், தான் அப்பா கால்ஷீட்டே கொடுத்தாராம். ஏற்கனவே மகளுக்காக தன்னோட மருமகன் தயாரிப்பில் நடித்த படத்துக்கு சரியாக சம்பளம் கூட வாங்கவில்லை என்கிற பஞ்சாயத்து ஒன்று ஓடிக் கொண்டிருக்க இந்த படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் நடிகருக்கு சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை என்கின்றனர்.

Star actor got upset due to her daughter not make her promise correctly?

மகள் மீது அதிருப்தி: மகள் ஏதோ முயற்சிக்கிறார். ஒரு தந்தையாக தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டுமே என நினைத்த நடிகர் சில நாட்கள் மகளுக்காக சம்பளம் கூட வாங்காமல் நடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம். அப்பவே இந்த படத்தை தன்னோட பெயரை வைத்து ப்ரோமோட் செய்யக் கூடாது என நடிகர் கண்டிஷன் போட்டாலும், ஒரு கட்டத்துக்கு மேல், தயாரிப்பு நிறுவனம் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட நிலையில், நடிகர் சம்மதம் தெரிவிக்க மொத்த படமும் அவரது பெயரிலேயே ப்ரோமோட் செய்யப்பட்டு வருகிறது.

ஈகோ கிளாஷ்: இந்த படத்தில் உச்ச நடிகரை தவிர்த்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களுக்கு இடையே ஈகோ கிளாஷ் ஏற்பட்டதாகவும் அந்த பஞ்சாயத்தே படத்துக்கு பெரும் பிரச்சனையாக மாறியது என்றும் பேச்சுக்கள் கிளம்பின. அந்த பஞ்சாயத்தையும் உச்ச நடிகர் தான் மகளுக்காக களமிறங்கி தீர்த்து வைத்தார் எனக் கூறுகின்றனர்.

ரெண்டு மகளும் சொதப்பிட்டாங்க: அப்பாவின் பெயரை மகள்கள் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்த்த நடிகருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளதாம். இரண்டாம் மகள் ஏற்கனவே ஹாலிவுட் படத்துக்கு படம் பண்ணுறேன் என சொல்லி விட்டு பொம்மை படம் எடுத்து வெளியிட்ட நிலையில், இன்னமும் அந்த படத்துக்கு அம்மா அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்னொரு மகளும் அப்பாவை நடிக்க வைத்து எடுத்த படத்தை சொன்ன தேதியில் வெளியிடாமல், பல காட்சிகள் காணாமல் போய் விட்டது. மீண்டும் நடிக்க வாங்க என டார்ச்சர் பண்ணி எடுத்து விட்டாராம். பல காட்சிகள் எடிட்டிங்கில் சுமாராக இருப்பதை பார்த்த நடிகருக்கு மொத்தமாக இந்த படத்தின் மீது நம்பிக்கையே இல்லை என்றும் போட்டி ரிலீஸ் எல்லாம் வேண்டாம் என்றும் சோலோவாக ஒரு தேதியை பிடித்து வெளியிடலாம் என ஐடியா கொடுத்திருக்கிறாராம் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X