ஈகோவை டச் பண்ண மாஸ் நடிகர்.. ஆல் ஏரியாவிலும் ஆளை இறக்கி அடிக்கும் உச்ச நடிகர்.. என்ன நடக்குது?
சென்னை: மாஸ் நடிகருக்கு இத்தனை சிக்கல் உருவாக காரணம் அந்த அரசியல் தலைவரா? அல்லது உச்ச நடிகரா? என்கிற குழப்பம் நிலவி வந்த நிலையில், மொத்த ஆட்களையும் அனைத்து இடங்களிலும் களமிறக்கி மாஸ் நடிகரை அடித்து நொறுக்குவதே உச்ச நடிகர் தான் என மாஸ் நடிகர் தரப்பு தற்போது உறுதியாக நம்பத் தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

பல ஆண்டுகள் நடிகர் சினிமா உலகையே கட்டி ஆண்டு வந்த நிலையில், அவருடைய விசுவாசிகள் தான் தற்போது ஒரு பெரிய தொகையை வாங்கிக் கொண்டு மாஸ் நடிகருக்கு எதிராக கம்பு சுத்தி வருவதாகவும் தன்னை தாண்டி மாஸ் நடிகர் சென்று விடக் கூடாது என்பதில் உறுதியாக உச்ச நடிகர் பல்வேறு வேலைகளை பார்த்து வருவதாக பகீர் கிளப்பி வருகின்றனர்.
ஈகோ கிளாஷ்: யார் நம்பர் ஒன் என்கிற ஈகோ கிளாஷ் தான் உச்ச நடிகருக்கும் மாஸ் நடிகருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் முட்டிக் கொண்டது என்றும் நடிகர்கள் இருவருமே பனிப்போரை செய்து வரும் நிலையில், அதனால் மாஸ் நடிகரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளரும் இயக்குநருக்கும் இடையே தான் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
விசுவாசிகளை இறக்கி: நடிகருக்காக சினிமாவில் பல வருடங்கள் விசுவாசிகளாக இருந்த சில பிரபலங்கள் அதிரடியாக யூடியூப் சேனல்களில் களமிறங்கி மாஸ் நடிகரின் படத்தை நாசம் பண்ணும் விதத்தில் எந்தளவுக்கு இறங்கி செய்ய முடியுமோ செய்து வருகின்றனர். இத்தனைக்கும் உச்ச நடிகர் படத்திலும் பிரச்சனைகள் இருந்தாலும், பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், மாஸ் நடிகர் படத்தில் இருந்த ஓட்டைகளை பெரிதாக்கி படத்தை ஒண்ணுமே இல்லாத படமாக மாற்றும் முயற்சியை உச்ச நடிகர் ஆட்கள் தான் செய்து வருவதாக கூறுகின்றனர்.
கழண்டு கொண்ட இயக்குநர்: இந்த பிரச்சனையில் சிக்கி மாஸ் நடிகர் பக்கம் நின்றால், தன்னால் அடுத்து உச்ச நடிகர் படத்தை பண்ண முடியாமல் போய் விடுமே என்கிற பயத்தில் இயக்குநர் நைசாக கழண்டு கொண்டார் என்றும் இந்த நம்பர் கேம் விளையாட்டில் என்னை கொண்டு வராதீங்க என அவர் ஒதுங்கியதில் தான் அவருக்கும் மாஸ் நடிகருக்குமே முட்டிக் கொண்டது என்கின்றனர்.
நிகழ்ச்சியே நடக்காது: மாஸ் நடிகரின் படத்தின் சாதனை நிகழ்ச்சி கூட நடைபெற விடக் கூடாது என்கிற முயற்சியில் உச்ச நடிகர் பல ஏற்பாடுகளை நடத்தி வருவதாகவும் அரசியல் ரீதியாகவும் சிக்கல்கள் உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியும் நடக்காது என்றே கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











