தேவையில்லாத ஆணி.. ஒரு போட்டோ வந்திருந்தாலே சைலன்ட்டாகி இருக்கும்.. உச்ச நடிகரால் ஃபேன்ஸ் வேதனை?
சென்னை: மீடியாக்களில் வரும் கிசுகிசுக்கள் மற்றும் விமர்சனங்களே சினிமா பிரபலங்களை அந்த காலத்தில் வெகுவாக பாதித்து வந்தது. ஆனால், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு என்றைக்கு சோஷியல் மீடியா ஆதிக்கம் அதிகரித்ததோ உலகம் முழுவதுமே வன்மம் நிறைந்த டாக்ஸிக் மையமாக மாறிவிட்டது என்கின்றனர்.
ஒரு வார்த்தை எதார்த்தமாக பேசினால் கூட ஓராயிரம் அர்த்தங்களுடன் விமர்சிக்கவும் ட்ரோல் செய்யவும் மீம் போடவும் ஆரம்பித்து விடுகின்றனர்.

இதையெல்லாம் சைலன்ட்டா கடந்து சென்றிருக்க வேண்டும். அல்லது, மாஸ் நடிகரை சந்தித்து ஒரே ஒரு போட்டோ வெளியே வந்திருந்தாலே அனைத்தும் சால்வ் ஆகியிருக்கும் அதை விடுத்து தேவையில்லாத ஆணியை உச்ச நடிகர் பார்த்ததால் அவருக்கு முட்டுக் கொடுக்க முடியாமல் ரசிகர்களே வேதனையில் உள்ளதாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
லீக்கான அந்த மேட்டர்: எதிரிக் கட்சிகளை இணைத்து விட வேண்டும் என்கிற பேச்சுவார்த்தை நடந்தது உண்மை தான் என அந்த பிரபல கட்சியின் தலைவர் ஒரே போடாக போட்டுள்ள நிலையில் தான் அதற்கு இவர் தான் தூது சென்றிருப்பார் என உச்ச நடிகருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் கிளம்ப காரணமாக அந்த மேட்டர் அமைந்து விட்டது என்கின்றனர். மேலும், மாஸ் நடிகர் எல்லாம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என நினைத்திருந்த நிலையில், வரலாற்றை அவர் திருப்பிப் போட நடிகருக்கு சற்றே ஈகோ ஹர்ட் ஆகிவிட்டது என்கின்றனர்.
கூப்பிட்டாலே வந்திருப்பார்: டைம் கிடைச்சா வாப்பா என மாஸ் நடிகரை உச்ச நடிகர் அழைத்தாலே ஓடோடி வந்துவிடுவார் என்றும் ஆனால், அவர் வர நினைத்த போது திடீரென உச்ச நடிகர் கிளம்பி வெளியூர் சென்றுவிட்டார் என்கிற பேச்சுக்கள் கசிந்து வரும் நிலையில், பாஸ் நடிகரை போல உச்ச நடிகரும் ஒரு எட்டு போய் பார்த்து ஒரு போட்டோ வெளியாகி இருந்தால் கூட அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அல்லது அமைதியாகவே இருந்திருக்கலாமே என்பது தான் ரசிகர்களின் ஆதங்கமாக மாறியுள்ளது என்கின்றனர்.
தேவையில்லாத ஆணி: வேண்டுமென்றே உச்ச நடிகர் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மீண்டும் சமூக வலைதளத்தில் யூடியூப் வைத்துக் கொண்டிருக்கும் பலர் பல கோணங்களில் உச்ச நடிகரின் செயலை படுமோசமாக விமர்சித்து வருகின்றனர். இதெல்லாம் தேவையில்லாத ஆணி தலைவரே என பிரபலம் ஒருவரே நடிகரிடம் சொல்லிவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. மாஸ் நடிகராவது நடிகரின் சங்கடத்தை போக்க அவரை சந்தித்து விட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications