ஆளுக்கு ஒரு ரெண்டு நாள்.. நட்பு ரீதியாக வந்து போறாங்களாம்.. உச்ச நடிகர் படத்தை எதிர்பார்க்கலாமா?
சென்னை: பாஸ் நடிகருடனான போட்டி காரணமாக உச்ச நடிகர் படமே பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகி வருவதாக அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், உள்ளே விசாரித்துப் பார்த்தால் மற்ற நடிகர்களுக்கு எல்லாம் கால்ஷீட் அதிகமாக இல்லை என்றும் வாம்மா மின்னல் என வந்து போவார்கள் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
காமெடி இயக்குநராக வலம் வந்த அந்த இயக்குநரை கலாய்த்தே தற்போது சீரியஸ் இயக்குநராக மாற்றி விட்டனர்.
ஆனால், அடுத்த பெரிய காமெடியையே இயக்குநர் பண்ண காத்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

நிறைய நடிகர்கள்
குறைவான நடிகர்களை வைத்துக் கொண்டு நிறைவான படத்தை தந்து வந்த காலமெல்லாம் மாறி சுயம்வரம் படம் போல இஷ்டத்துக்கு ஆட்களை போட்டு குறுகிய காலத்தில் படம் எடுக்கும் யுக்தியை இயக்குநர்கள் தொடங்கி உள்ளனர். பல்வேறு நடிகர்கள் இணைவது பிரச்சனை இல்லை. அவர்களுக்கான கதாபாத்திரங்களையும் வலுவானதாக எழுத வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக ஒரே ஒரு நடிகரை ஃபோகஸ் செய்தே கதையை உருவாக்கி விட்டு எக்கச்சக்க நடிகர்களையும் உள்ளே இழுத்துப் போட்டு படங்களை வீணடித்து விடும் நிலையும் சமீப காலமாக அதிகளவில் பார்க்க முடிகிறது.

முக்கியத்துவம் குறைந்து விடும்
ஹீரோவை விட மற்ற நடிகர்களுக்கு அதிக ஸ்கோப் உள்ள காட்சிகளும் ஸ்க்ரீன் ஸ்பேஸும் கொடுக்கப்பட்டால் ஹீரோவே படத்தில் கேமியோ ரோலில் தான் நடித்துள்ளார் என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள். இந்நிலையில், எப்படி படம் எடுப்பதே என்பது புரியாமல் ஒரு இளம் இயக்குநர் தலையை பிய்த்துக் கொண்டு வருவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இயக்குநரை இயக்கும் இயக்குநர்
ஒரு இயக்குநர் படத்தை உருப்படியாக இயக்குவதே பெரிய சிரமமாக மாறி வரும் சூழ்நிலையில், அந்த இயக்குநரையே இன்னொரு இயக்குநரை வைத்து உச்ச நடிகர் இயக்கி வரும் நிலையில், என்ன ஆகப் போகிறதோ என பலரும் படத்தின் நிறைவை ஒட்டி எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

2 நாள் கால்ஷீட்
இந்த படத்தில் அந்த மாநில பிரபலம் நடிக்கிறார். இந்த மாநிலத்தின் முன்னணி நடிகர் நடிக்கிறார். பான் இந்தியா படம், பான் இந்தியா ஸ்டார் நடிக்கிறாங்க என பில்டப் செய்யப்பட்டு வரும் நிலையில், உள்ளே விசாரித்துப் பார்த்தால் ஒவ்வொரு முன்னணி நடிகர்களுமே வெறும் கேமியோ மட்டும் தான் என்றும் அத்தனை பேருக்கும் 2 நாள் மற்றும் 3 நாட்கள் கால்ஷீட் தான் என சொல்லப்படுகிறது.

நட்புக்காக
படத்தில் பெரிய அளவில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் உச்ச நட்சத்திரத்தின் நட்பின் பெயரிலேயே மற்ற நடிகர்களும் நோ சொல்லாமல் ஒரு நாள் இரு நாள் கால்ஷீட்டை ஒதுக்கி இந்த படத்தில் நடித்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

எக்ஸ்பெக்டேஷன் பண்ணலாமா
பான் இந்தியா ஸ்டார்கள் இணையும் பெரிய படமாக இந்த படம் இருக்கும் என விளம்பரப்படுத்தினாலும், படத்தில் அந்தளவுக்கு அனைவருக்கும் சமமான போர்ஷன்கள் மற்றும் முக்கியத்துவம் இருக்குமா? என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. பெரியளவில் எக்ஸ்பெக்டேஷன் உடன் இந்த படம் உருவாகுமா என்பதை வெயிட் பண்ணித் தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











