பயங்கரமா பிட்டுப் போட்ட பிரம்மாண்டம்.. ஆளவிடுடா சாமின்னு எஸ்கேப் ஆன உச்ச நடிகர்.. சோலி முடிஞ்சு!

By Staff

சென்னை: உச்ச நடிகரையும் அந்த பிரம்மாண்டத்தையும் ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக அமர வைத்து அழகு பார்த்த நிலையில், எப்படியாவது இவரை கரெக்ட் பண்ணிட்டா நம்ம கனவுப் படத்தை எடுத்து விடலாம் என்றும் மறுபடியும் நம்மளோட பலத்தை காட்டிவிடலாம் என ஏகப்பட்ட பிளான் போட்டு உச்ச நடிகர் முன்பாக எக்கச்சக்க பிட்டு போட்ட பிரம்மாண்டத்துக்கு கடைசியாக நடிகர் எந்தவொரு உத்திரவாதமும் கொடுக்காமல் கம்பி நீட்டியதால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம்.

ஏற்கனவே உடைத்த ஃபர்னிச்சர்கள் போதாது என இன்னமும் பெரிய ஃபர்னிச்சரை உடைத்தே தீருவேன் என பிரம்மாண்டம் அடம்பிடித்து அலைந்துக் கொண்டிருக்கும் நிலையில், தலையை சிலுப்பினால் அவ்ளோதான் என பல தயாரிப்பாளர்களும் மஞ்சத் தண்ணி தெளிச்சாலும் அசையாத ஆடாகவே இருக்கின்றனர்.

Star Actor not showing any kind of support to outdated director shocks kollywood

ஒவ்வொரு தயாரிப்பாளரையும் மொத்தமாக சோலியை முடித்து விட்டு அடுத்தடுத்த தயாரிப்பாளர் தலையில் மசாலா தடவி வருகிறார் அந்த பிரம்மாண்டம் என்பது ட்யூப் லைப் வெளிச்சம் போல அனைவருக்கும் தெரிந்த நிலையில், இதற்கு மேலும், யாரும் ட்யூப் லைட்டாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.

தண்டச் செலவு: படத்துக்கு செலவு செய்வதை தாண்டி தேவையற்ற செலவுகளை அதிகம் பார்க்க ஆரம்பித்தது தான் அந்த பிரம்மாண்டத்தை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என கோடம்பாக்கத்தில் பலரும் கூறி வருகின்றனர். முன்பை போல அவருக்கு படங்களை எடுக்கத் தெரியவில்லை என்றும் ஒரே மாவை மீண்டும் மீண்டும் அரைத்தால் நல்லாவா இருக்கும் என்றும் போர் அடிக்கும் விதமாக எடுக்கும் படங்களுக்கு நடிகர்களின் கால்ஷீட், தயாரிப்பாளரின் கோடிக்கணக்கான பணத்தை ஐடியா இல்லாமல் வீணடித்து வருவதால் அவரிடம் மீண்டும் தலையை கொடுக்க யாரும் தயாராக இல்லை என்பது தான் உண்மை என்கின்றனர்.

கடைசி வரை கனவுதான்: தன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களை தவிடுபொடியாக்கும் விதமாக தனது சொந்த தயாரிப்பிலேயே குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்து கம்பேக் கொடுத்தால் நிச்சயம் அவருடைய கனவு நிறைவேறும் என்கின்றனர். இல்லையென்றால், கடைசி வரை கனவு கனவாகவே போய்விடும் என்றும் இப்போது இருக்கும் நிலைமை தெரியாமல் யாராவது சிக்கினால் கண்டிப்பாக பெரிய இழப்பை தான் சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர்.

அலர்ட்டான உச்ச நடிகர்: பாஸ் நடிகரின் 3ம் பாகத்தை உச்ச நடிகரை வைத்தாவது உயிர் பெற செய்து விடலாம் என பிரம்மாண்டம் போட்ட கணக்கிற்கும் ஆளவிடுடா சாமி என அவர் அலர்ட்டாகி எஸ்கேப் ஆகிவிட்டாராம். சில மாதங்கள் ஓய்வெடுக்கப் போவதாகவும், எந்தவொரு கேமியோவும் செய்ய முடியாது, வேறு ஆளை பாருங்க என்றே பதில் அளித்துவிட்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X