மாஸ் நடிகருக்கு மரண அடி கன்ஃபார்ம்?.. பிரைட் நடிகரின் ருத்ர தாண்டவத்தால் ஆடிப்போன திரையுலகம்!

By Staff

சென்னை: இதுவரை எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் பிரைட் நடிகரை வைத்து படம் எடுத்து இப்படியொரு பில்டப் செய்யவில்லை என்றும் முதன்முறையாக அந்த தயாரிப்பு நிறுவனம் இப்படியெல்லாம் செய்யக் காரணமே பிரைட் நடிகர் இந்த முறை இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கப்போவது உறுதி என்கிற முடிவில் இருப்பது தான் என்கின்றனர்.

இந்த ஆண்டு உச்ச நடிகர் படத்தை விட மாஸ் நடிகர் படம் தான் இதுவரை வசூலில் உச்சத்தில் உள்ளது. அதனால் ஏகப்பட்ட பில்டப்புகளை செய்து கொண்டிருக்கும் நடிகரின் கொட்டத்தை அடக்கவே இப்படியொரு பெரிய படத்தை பெரிய பொருட்செலவில் செய்ய முடிவு செய்தாராம் அந்த பிரைட் நடிகர்.

gossip kollywood actors gossip

இயக்குநர் மீது வைத்த அதீத நம்பிக்கைக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் அந்த டைரக்டர் இறங்கி வேலை பார்த்ததில் படத்தில் இருந்த குறைகள் அனைத்தையும் பிரைட் நடிகரே டைம் எடுத்து க்ளியர் செய்திருக்கிறார் என்கின்றனர்.

மரண அடி உறுதி: இனிமேல், கோலிவுட்டில் நம்பர் ஒன் என சொல்லிக் கொண்டு யாருமே வரக் கூடாது. எப்போவுமே இனி நான் தான் நம்பர் ஒன் என்பதை அதிரடியாக நிரூபிக்கும் விதமாக பிரைட் நடிகர் மாஸ் நடிகருக்கு எதிராக பெரிய சம்பவத்தை இந்த ஆண்டு செய்ய காத்திருப்பதாக கூறுகின்றனர். உச்ச நட்சத்திரம், பாஸ் நடிகர், ஒல்லி நடிகர் என பல நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக வந்து கொடியேத்துவேன் என்கிற உறுதியுடன் பிரைட் நடிகர் முழு நம்பிக்கையுடன் களமிறங்கப் போகிறாராம்.

தயாரிப்பாளரை வைத்து செய்கை: போன படம் எந்தளவுக்கு போண்டி படமாக மாறியது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டாலும், இந்த முறை தயாரிப்பாளரை வைத்து தரமான செய்கையை பிரைட் நடிகர் செய்து ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் என்றும் படத்திற்கு பெரிய வசூல் மற்றும் லாபம் வருவது உறுதியாகி உள்ள நிலையில், மாஸ் நடிகரை இந்த முறை பின்னுக்குத் தள்ளி விடுவோம் என்பதில் பிரைட் நடிகர் முழு நம்பிக்கையுடன் உள்ளார் என்கின்றனர்.

இனி நான் தான் நம்பர் ஒன்: மாஸ் நடிகரின் கனவுக்கோட்டையை சின்னாபின்னமாக சிதைக்க அடுத்த படத்துக்கு பல இடங்களில் செக் வைக்கவும் இறங்கி வேலை செய்ய பிரைட் நடிகர் முடிவெடுத்து விட்டார் என்றும் மாஸ் நடிகர் ஒதுங்கி விடும் நிலையில், அந்த இடத்தை இனிமேல் நாம் தான் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதில் திடமாக பிரைட் நடிகர் இருப்பதாக கூறுகின்றனர். அவரது நம்பிக்கையை அந்த ஃபயர் படம் பாழாக்காமல் இருந்தால் சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X