உச்ச கட்ட டென்ஷனில் உச்ச நடிகர்.. அந்த 2 பிரச்சனையையும் சமாளிக்க வேண்டும்.. என்ன செய்யப் போறாரு?
சென்னை: பல ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு அதே பழைய நண்பன் நடிகர் போட்டியாக மாறி உள்ளது மற்றது இயக்குநர் மீதான விமர்சனம் என இந்த இரண்டு பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற உச்சகட்ட டென்ஷனில் உச்ச நடிகர் உள்ளாராம்.
அவசரப்படுத்தாமல் இயக்குநருக்கு தேவையான நேரத்தை கொடுத்து வருவதற்கு காரணமும் அதுதானாம். ஆனால், அதே சமயம் சில பல பிளான் 'பி'க்களையும் வகுத்து வருகிறாராம் உச்ச நடிகர்.
கடந்த பல ஆண்டுகளாகவே ஏகப்பட்ட வெற்றிகள் சிறிய தவறுகள் காரணமாக மிஸ் ஆகி வருவதை உணர்ந்து கொண்ட அவர், இந்த முறை முழு மூச்சாக தனது படத்தின் மீது முழு ஆர்வத்தையும் அக்கறையையும் செலுத்தி வருகிறாராம்.

ரொம்பவே முக்கியம்
இதுவரை கமர்ஷியலாக ஏதோ செய்ததை போல இனியும் செய்ய முடியாது என்றும் அனைவரும் தன்னையும் தனது படத்தையும் ரொம்பவே உற்றுநோக்கி காத்திருப்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளார் அந்த உச்ச நட்சத்திரம். அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தரமான படத்தை கொடுக்க ரொம்பவே கடுமையான முயற்சிகளையும் செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

இயக்குநர் பிரச்சனை
இதுவொரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் அந்த இளம் இயக்குநர் மீதான அடுக்கடுக்கான விமர்சனங்களும், போன படத்தின் தோல்வியால் எழுந்து நிற்கும் பிசினஸ் பிரச்சனைகளும் நடிகரை நிம்மதியாக தூங்கக் கூட விடுவதில்லையாம். ஏற்கனவே குடும்பத்தில் நடந்த பிரச்சனையே நடிகரை உலுக்கி எடுத்த நிலையில், நம்பிக்கையாகவும், நிம்மதியாகவும் சினிமா தொழிலை கூட பண்ண முடியவில்லையே என அதிகமான யோசனையில் ஆழ்ந்துள்ளாராம்.

மீண்டும் முளைத்த பேட்டி
பல ஆண்டுகளாக தனக்கு யாரும் போட்டியாக இல்லாத நிலையில், தற்போது தன்னுடைய பழைய போட்டியாளரும் நண்பருமான அந்த பாஸ் நடிகர் போட்டியாக முளைத்திருப்பது உச்ச நடிகருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் அந்த படத்தின் வசூலை முந்தும் அளவுக்கு தனது அடுத்த படம் இருக்க வேண்டும் என்கிற முனைப்பு தான் அவரை தற்போது வாட்டி வதைத்து வருகிறதாம்.

3 பேரை இறக்கி இருக்காராம்
அந்த இயக்குநர் மீதான நம்பிக்கை எல்லாம் இல்லாமல் இல்லையாம். ஆனால், இந்த முறை தான் தோற்று விட கூடாது என்பதில் ரொம்பவே வைராக்கியமாக இருக்கிறாராம் உச்ச நடிகர். அதற்காக ஒரு இயக்குநர், ஒரு சிறந்த கதையாசிரியர், ஒரு சிறந்த வசனகர்த்தா என பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய 3 பேரை தனது படத்தின் பணிகளுக்காக இறக்கி உள்ளாராம். நிச்சயம் இந்த தடவை ஹிட் மிஸ் ஆகக் கூடாது என்பதை அனைவருக்கும் ஸ்ட்ரிக்ட் வார்னிங்காகவே கொடுத்து இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











