மாஸ் நடிகருக்கு மரண அடி கொடுக்கத்தான் இதெல்லாம்.. உச்ச நடிகரின் ருத்ர தாண்டவத்தால் ஆடிப்போன கோலிவுட்
சென்னை: இதுவரை எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் உச்ச நடிகரை வைத்து படம் எடுத்து இப்படியொரு பில்டப் செய்யவில்லை என்றும் முதன்முறையாக அந்த தயாரிப்பு நிறுவனம் இப்படியெல்லாம் செய்யக் காரணமே உச்ச நடிகரின் உத்தரவு தான் என்கின்றனர்.
மாஸ் நடிகரால் அதள பாதாளத்துக்கு சென்ற தயாரிப்பு நிறுவனத்தை கை கொடுத்து உச்ச நடிகர் தூக்கி விட்ட நிலையில், தனது பட்டத்தை பறிக்க மறைமுக வேலைகளில் ஈடுபட்ட நடிகர் பற்றிய விஷயங்களை தெரிந்துக் கொண்டு தான் இந்த படத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் மரண அடி கொடுத்து விட்டார் உச்ச நடிகர் என்கின்றனர்.

உச்ச நடிகரின் ஈகோவை அதிகமாக மாஸ் நடிகர் சீண்டியது தான் இப்படி புரட்டி புரட்டி எடுக்க காரணமே என்கின்றனர்.
மாஸ் நடிகருக்கு மரண அடி: இனிமேல், கோலிவுட்டில் டான் என சொல்லிக் கொண்டு யாருமே வரக் கூடாது. எப்போவுமே இங்க நான் தான் டான் என்பதை அதிரடியாக நிரூபித்த உச்ச நடிகர் மாஸ் நடிகருக்கு தயாரிப்பு நிறுவனம் மூலம் மறக்க முடியாத மரண அடியை கொடுத்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சு எழுந்துள்ளது.
நடிகர் தனது சொந்தக்காரர்களையே பகைத்துக் கொண்டு பல வித மோகங்களில் திளைத்துள்ள நிலையில், உச்ச நடிகரிடமே சீண்ட நினைத்த நிலையில், தான் சின்ன பின்னமாக்கிவிடும் முடிவுக்கே மாஸ் நடிகர் வந்து விட்டதாக கூறுகின்றனர்.
தயாரிப்பாளரை வைத்து செய்கை: போன படம் எந்தளவுக்கு போண்டி படமாக மாறியது என்பதை அந்த விழாவில் பேசியது மட்டுமின்றி தயாரிப்பாளரை வைத்தே தற்போது தரமான செய்கையை உச்ச நடிகர் செய்து ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் என்றும் படத்திற்கு வந்த வசூல் மற்றும் லாபத்தின் பாதி தான் கணக்கிலேயே வந்துள்ளது என்றும் கணக்கில் வராமல் இன்னும் லாபம் அதிகமாக இருக்கும் என்றும் அதனால் தான் இப்படி உச்ச நடிகருக்கே எக்கச்சக்கமாக கொடுத்துள்ளார் அந்த தயாரிப்பாளர் என பெரும் பேச்சுக்கள் அலை மோதி வருகின்றன.
அடுத்த படத்துக்கு ஆப்பு: மாஸ் நடிகரின் கனவுக்கோட்டையை சின்னாபின்னமாக சிதைக்க அடுத்த படத்துக்கு பல இடங்களில் செக் வைக்கவும் இறங்கி வேலை செய்ய உச்ச நடிகர் முடிவெடுத்து விட்டார் என்றும் மாஸ் நடிகர் மன்னிப்பு கேட்காத வரையில் அவரை விடாமல் வச்சு செய்யப் போவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











