Don't Miss!
- Lifestyle
உங்க கண்களில் இந்த மாதிரி அறிகுறி இருந்தா... அது மாரடைப்பை ஏற்படுத்தும் பிபியோட அறிகுறியாம்..!
- News
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
காத்திருந்த விருது இயக்குநருக்கு கல்தா கொடுத்த உச்ச நட்சத்திரம்.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தானா?
சென்னை: ஒல்லி நடிகரை நம்பியே வாழ்க்கையை ஓட்டியதால் பெரிய அளவில் தனது திறமை வெளிப்படவில்லை என்கிற வருத்தம் அந்த விருது இயக்குநரை எப்போதுமே வாட்டி வருகிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் முதல் பாலிவுட்டின் முன்னணி நடிகர் வரை பலருக்கும் இவரே வலிய சென்று கதை சொன்னாலும், இவர் மீது அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை எழவில்லை.
அப்படியே ஓகே சொன்னாலும், இந்த இயக்குநர் தானே பொறுமையாக பண்ணலாம் என வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு அவரது நேரத்தை விரயமாக்கி வருகின்றனர்.
சினிமாவில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்கிறேன்..ஆதாரத்துடனே கிசுகிசு பேசுகிறேன்.. பயில்வான் ரங்கநாதன்!

பெயரிலியே ஹிட்
விருது இயக்குநர் இதுவரை இயக்கிய எந்தவொரு படமும் சொதப்பவே இல்லை. மாறாக ஏகப்பட்ட உயரிய விருதுகளை படத்துக்கு படம் அள்ளி தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்து வருகிறார். ஆனால், அவருடைய போதாத காலம் அவரை மதித்து அவர் இயக்கத்தில் நடிக்க எந்தவொரு முன்னணி ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் பாக்ஸ் ஆபிஸ் பகவான்கள் யாருமே அவருக்கு கால்ஷீட் கொடுப்பதில்லை என்பது தான்.

காப்பி அடிப்பவர்களுக்கு வாய்ப்பு
சொந்தமாக சீன் வைக்கத் தெரியாமல் சிறந்த படத்தை கொடுக்க தெரியாமல் பழைய படங்களை புது கலருடன் காப்பி அடித்துக் கொடுக்கும் இயக்குநர்களையே நம்பி முன்னணி நடிகர்கள் ஓடுவது அவரை ரொம்பவே மனதளவில் பாதித்துள்ளது. ஒரு படத்தை ஹிட் கொடுத்தாலே இளம் இயக்குநர்களுக்கு அடுத்தடுத்து உச்ச நட்சத்திரத்தின் படம் வரை கிடைக்கிறது. ஆனால், நாம் தரமான படத்தை கொடுத்து வெற்றி பெற்றாலும், நம்மை யாரும் சீண்ட மாட்டேங்கிறாங்களே என வேதனைப்பட்டு வருகிறார்.

கைவிட்ட உச்சநட்சத்திரம்
மருமகன் நடிகருக்கு தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் அந்த இயக்குநருடன் இணைந்து நாமும் ஒரு படம் பண்ணலாம் என உச்ச நடிகர் உறுதி அளித்ததும், அவருக்காக பக்காவான திரைக்கதையை தயார் செய்துள்ளார் அந்த விருது இயக்குநர். ஆனால், தற்போது, இனிமேல் என்னால் உன் படத்தில் நடிக்க முடியாதுப்பா, வேற யாரையாவது பார்த்துக்கோ என கைவிட்டு விட்டாராம்.

அவர் தான் காரணமா
இந்த இயக்குநரை அறிமுகப்படுத்தியவரே அந்த ஒல்லி நடிகர் தான் என்பதால் மட்டுமின்றி படத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில் தான் தற்போது அந்த படமே வேண்டாம் என உச்ச நட்சத்திரம் ஒதுங்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. உச்ச நட்சத்திரம் வேண்டாம் என சொல்லியதும் உடைந்தே போய்விட்டாராம் அந்த விருது இயக்குநர்.

மாஸ் ஹீரோ
பாலிவுட் நடிகரும் இவரை கை கழுவிட்டு அந்த காப்பி இயக்குநருடன் படம் பண்ணி வரும் நிலையில், எப்படியாவது அந்த மாஸ் ஹீரோவுடன் ஒரு படமாவது பண்ணி விட வேண்டும் என முயற்சி செய்து வரும் நிலையில், இங்கேயும் அதற்கு முட்டுக்கட்டையாக மாறி உள்ளாராம் அந்த காப்பி இயக்குநர். பிரைட் நடிகர் காலம் தாழ்த்தாமல் சீக்கிரமே படத்தை ஆரம்பித்தால் தான் விருது இயக்குநருக்கு போன மூச்சே திரும்ப வரும் என்கின்றனர்.
-
சின்ன படங்கள்.. நம்மள நம்பித்தான் வருது.. ஓய்வெடுக்காமல் உழைத்த கெளசிக்.. பிக் பாஸ் அபிஷேக் உருக்கம்
-
அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண 15 லட்சம்.. அந்த டைரக்டர் கை வச்சிட்டாரு.. நரிக்கூட்டம் ஜனனி ஷாக் பேட்டி!
-
ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்!