பவர் நடிகருக்கு பகிரங்க சப்போர்ட்.. ஸ்டார் நடிகரின் நடுவீட்டில் பஞ்சாயத்து.. ருத்ரதாண்டவமாடிய மருமகள்
சென்னை: பிசினஸில் பல ஆண்டுகளாக அடி மீது அடி வாங்கிக் கொண்டு இருந்த ஸ்டார் நடிகருக்கு இப்போதுதான் ஏதோ அத்தி பூத்தது போல ஒரு சக்சஸ் கிடைத்து, உற்சாகமாக உள்ளார். இதற்கிடையில் ஸ்டார் நடிகரின் அப்பா சமீபமாகவே பவர் நடிகருக்கு ஏதோ அதிகாரப்பூர்வ கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டுக் கொண்டு இருப்பது போல நடவடிக்கைகள் இருந்ததால் ஸ்டார் நடிகரும் அவரது மனைவியும் செம கோபத்தில் இருந்துள்ளனர்.
பவர் நடிகருக்கு ஆதரவாக எப்போதாவது ஒரு கருத்துச் சொன்னால் பரவாயில்லை, ஆனால் இவரோ எங்கு போனாலும் பவர் நடிகரின் புராணத்தை பாடிக் கொண்டு இருப்பதால், ஸ்டார் நடிகர் இது தொடர்பாக தனது அப்பாவிடம் பேசி விட்டாராம்.
அதாவது இது தொடர்பாக பேசுகையில், எனது சினிமா வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகளாக பல நல்ல படங்களுக்கு வெற்றியை ஈட்டாமல் போனதற்கு காரணமே அந்த பவர் நடிகரும் அவரது மேனேஜர் வசம் இருக்கும் சமூக வலைதள கைக்கூலிகளும், பவர் நடிகரின் ரசிகர்களும் தான். இது எல்லாம் உங்களுக்குமே நன்றாக தெரியும், அப்படி இருந்தும் நீங்கள் பவர் நடிகர் புராணத்தை தொடர்ந்து பாடுவதற்கு என்ன காரணம்? எனக்கு நடந்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளார்.

இணைய கைகூலிகள்: தமிழ் சினிமாவில் பல பாக்ஸ் ஆபீஸ் ரெகார்டுகளை படைக்கும் என்று நம்பி எடுக்கப்பட்ட, பல ஆண்டு உழைப்பையும், பெரும் பணத்தையும் போட்டு எடுக்கப்பட்ட எனது கணவரின் படத்தை போலி விமர்சனங்களாலும் வெறுப்பு விமர்சனங்களலாலும் நாசமாக்கியது அந்த பவர் நடிகரின் ரசிகர்கள் தான். உருவ கேலி செய்தது, குடும்ப உறுப்பினர்களை மிகவும் மோசமாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த தனது ரசிகர்களை கண்டிக்காத அந்த பவர் நடிகருக்கு நீங்கள் பல்லாக்கு மட்டும் தான் தூக்கவில்லை, அதையும் போய் செய்து விட்டு வாருங்கள் என்று ஸ்டார் நடிகரின் மனைவி நடு வீட்டில் ருத்ர தாண்டவமே ஆடிவிட்டாராம்.
வெடித்த மருமகள்: இப்படி இருக்கையில் இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே மாமனாருக்கும் மருமகளுக்கும் இருந்த ஈகோ பிரச்னையால் தான் ஸ்டார் நடிகருடன் வனவாசம் செல்வது போல நடிகை வீட்டை விட்டே வெளியேற் இருந்தார் என்பது குறித்தும் பேச்சுக்கள் ஓடிக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications