போதும்டா மகனே.. அந்த நடிகை சவகாசத்தை இத்தோடு விட்டுடு.. தலையில் அடித்துக் கொள்ளும் நடிகரின் தந்தை
சென்னை: இந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அப்படி இருக்கும்போது நடிகரை சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஆளாக்கியது, நடிகரின் தந்தையும் தாயும் தான். இப்படி இருக்கையில் நடிகரின் படங்களும் நன்றாகவே கல்லா கட்டி வருகிறது. இப்படி இருக்கும்போது, மகனை சினிமா உலகின் அரசன் ஆக்கலாம் என்று நடிகரின் அம்மாவும் அப்பாவும் எதிர்பார்த்த நிலையில், நடிகரோ தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல, நடந்து கொள்கிறார் என்று தலையிலேயே அடித்துக் கொள்கிறாராம்.
அதாவது நடிகர், நடிகை ஒருவருடன் ஓவர் நெருக்கமாக இருக்கிறாராம். அதுவும் அந்த நடிகைக்கு இந்த நடிகரோ ஆறோ ஏழோ என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. நடிகருக்கு முன்னால் நடிகை தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்கள், தெலுங்கு சினிமாவில் ஒரு நடிகர், ஒரு தொழிலதிபர், ஒரு அரசியல் புள்ளியின் மகன் என எல்லோருடனும் மிகவும் நெருங்கிப் பழகி உள்ளார் என்பதுதான் பேச்சு.
நடிகை ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தாலும் அவரது சொத்து மதிப்பு மட்டும் குறையாமல் கணிசமாக ஏறிக் கொண்டே இருக்கிறதாம். நடிகை யாருடன் ஊர் சுற்றுகிறாரோ அவர்கள் தலையில் தனது மெயின்டனஸ் செலவைக் கட்டிவிடுவாராம். அப்படித்தான் தெலுங்கு நடிகர் பெரிய அளவில் பணத்தை இழந்து உஷாராகி விட்டார்.

ஓவர் நெருக்கம்: இப்படி இருக்கையில் நடிகர் தற்போது சினிமா மட்டும் இல்லாமல், புதிய பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த பிசினஸில் நடிகையையும் இணைத்துக் கொள்ள பிளான் போட்டு வருகிறாராம். அதாவது நடிகர் தொடங்கிய பிசினஸில் இரண்டு நிறுவனங்கள் இருக்கிறதாம். அதில் ஒரு நிறுவனத்தை மொத்தமாக நடிகை வசம் ஒப்படைத்து, நடிகையையே கவனித்துக் கொள்ள சொல்லவும் பிளான் போட்டு விட்டதாக தகவல்.
நடிகைதான் வேண்டும்: இது குறித்து தெரிந்து கொண்ட நடிகரின் அம்மாவும் அப்பாவும், அடேய் மகனே உனக்கு நாங்களே நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம், இல்லையே நீயே எதிர்காலத்தில் யாரையாவது காதலிச்சா சொல்லு கல்யாணத்தை தடபுடலாக நடத்திடலாம் என்று எல்லாம் கூறி உள்ளார்கள். ஆனால் நடிகரோ, நான் நடிகையை தான் கட்டுவேன் என்று மிகவும் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டாராம்.
தலையில் அடித்துக் கொள்ளும் பெற்றோர்கள்: மகனுக்குச் சொல்லிப் பார்த்த பெற்றோர், நடிகையை திருமணம் செய்து கொள்வது எல்லாம் எதிர்காலத்தில் பார்க்கலாம், இனிமேல் நடிகை விஷயத்தில் நாங்கள் தலையிடவில்லை, ஆனால் இரண்டாவது கம்பெனியைத் தூக்கி நடிகையிடம் கொடுத்து விடாதே, எல்லா உழைப்பும் வீணாக போய்விடும் என்று எச்சரித்ததாக கோலிவுட்டில் பேச்சுக்கள் கசிந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications