காப்பி பூனை பார்த்துவிட்ட வேலை.. உச்ச நடிகர் படத்துக்கு இப்படியொரு சிக்கலா?.. அவர் மனசு வச்சாதான்?

By Staff

சென்னை: காப்பி பூனையை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தொடர்ந்து புது இயக்குநர்களுடன் உச்ச நடிகர் படம் பண்ணி வருவதால், கிங் நடிகரை அந்த பக்கம் போயிடாதீங்க என லாக் செய்து விட்டார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

டார்க் டைரக்டரும் உச்ச நடிகர் பெயரை சொன்னாலே மற்ற மாநில நடிகர்கள் போல அவரும் மண்டையை ஆட்டிக் கொண்டு வந்துவிடுவார் என ரொம்பவே நம்பிக்கையுடன் அவரை வைத்து அவருக்கான காட்சிகளையும் எழுதி அனைத்து வேலைகளையும் பார்த்துவிட்ட நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார் என்கின்றனர்.

Star Actor struggled to finish his big movie due to Copycat Director hidden attack
Photo Credit:

கிங் நடிகருக்கு இணையாக ஒரு பாலிவுட் நடிகரை பிடிக்கும் முனைப்பில் டார்க் வேலை பார்த்து வருவதால் தான் இன்னமும் அந்த படம் முடிந்த பாடில்லை என்றும் உச்ச நடிகருக்காக அடுத்தடுத்து படங்களும் வெயிட்டிங் லிஸ்ட்டிலேயே உள்ளதாகவும் கூறுகின்றனர்.

உச்ச நடிகர் அப்செட்: இந்த மாதம் படமே வெளியாகும் என ரொம்பவே எதிர்பார்த்து தான் டார்க் டைரக்டர் படத்தில் நடிக்க ஆரம்பித்தாராம் உச்ச நடிகர். ஆனால், இன்னமும் படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடிக்காமல் உச்ச நடிகரையும் தயாரிப்பு தரப்பையும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளார் என்கின்றனர். இதற்கு காரணமே காப்பி பூனை தான் என சில கிசுகிசுக்கள் பரவத் தொடங்கியுள்ளன.

நோ சொன்ன கிங்: ஏற்கனவே ஒரு பாலிவுட் நடிகரை நடிக்க வைத்து மொக்கைப் பண்ண நிலையில், கிங் உஷாராகி விட்டார் என பஞ்சாயத்துக்கள் கிளப்பிய நிலையில், அதற்கு பின்னணியில் இருந்து வேலை பார்த்ததே காப்பி பூனை தான் என்கின்றனர். தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர் கொடுத்த முக்கியத்துவம் அளவுக்கு உச்ச நடிகர் தன்னை மதிக்காமல் தனது படத்தில் நடிக்க மறுத்த நிலையில், தான் இப்படியொரு வேலையை பார்த்துவிட்டார் என்று பகீர் கிளப்புகின்றனர்.

டார்க் டைரக்டருக்கு தலைவலி: கிங்கை வைத்து பேங் பண்ணலாம் என்று பார்த்த டார்க் டைரக்டருக்கு அவரை வச்சு பேங் பண்ணிவிட்டார் என்பதால், வேறு ஒரு பாலிவுட் நடிகரை பிடித்தாக வேண்டிய சூழலில் சுற்றி வருகிறாராம். அதே நேரத்தில் ஒருத்தரும் உச்ச நடிகருடன் இணைந்து படம் பண்ணுவதற்கு ரெடியாக இல்லை என்றும் தொடர்ந்து அவருடைய படங்கள் ஃப்ளாப் ஆகி வரும் நிலையில், ரொம்பவே யோசிப்பதாக கூறுகின்றனர். காப்பி பூனை சரியான நேரம் பார்த்து காலை வாரியதற்கு பின்னணியில் மாஸ் நடிகர் கைங்கரியமும் இருக்கும் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X