பொண்டாட்டி பேசிய பேச்சுக்கு.. புருஷனை ஆட்டிப் படைக்குது.. இனி பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்

By Staff

சென்னை: இந்த ஸ்டார் ஜோடி தென்னிந்திய அளவில் மட்டும் இல்லாமல், இந்திய அளவிலும் பிரபலமானவர்கள். இவர்களில் மனைவிக்கு கொஞ்சம் கூடுதலாகவே ஹெட் வெயிட் இருக்கும் நபர். மாமனாருடன் ஏற்பட்ட பிரச்னையால் புகுந்த வீட்டில் இருந்து வெளியேறி தனது பெயரில் புது வீட்டை பல கோடிகளில் வாங்கி, தனது பெயர் பலகையைப் போட்டு, இது என்னோட வீடு என்று போட்டது மட்டும் இல்லாமல், மாமனார், மாமியார் என யாரையும் கிரகபிரவேசத்திற்கு கூட கூப்பிடவில்லையாம்.

நடிகரும் இந்த பிரச்னைகள் எல்லாம் போக போக சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் நடிகையோ குடும்பத்தில் மட்டும் இல்லாமல் வெளியேயும் பிரச்னைகளை வளர்த்துக் கொண்டார். அது நடிகரையும் அவரைச் சார்ந்தவர்களையும் போட்டு பழி வாங்கி வருகிறது.

Star Actor Struggles to Handle Wife s Controversial Statements Industry Circles Say Even Palani Kavadi Won t Help Now

நடிகையின் ஈகோ: நடிகை போனோமா, நடித்தோமா, முறையாக சம்பளத்தை பெற்றோமா என்று இருந்திருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு வேளை படப்பிடிப்புத் தளத்தில் ஏதாவது பிரச்னை என்றால் உடனே அதை சரி செய்து கொள்ளும் அளவுக்கு மிகவும் பவர்ஃபுல்லான நடிகைதான் இவரும். ஆனால், தான் ஏதோ வேற்று கிரகத்திற்கு சென்று நடித்து, அந்த படத்திற்கு புரோமோசன் செய்து வருவதாக நினைத்து, தன்னை வளர்த்த தென்னிந்திய சினிமா குறித்து அவருக்கு இருந்த மனக்குமுறல்களை வெளிப்படுத்தி விட்டார்.

எரியும் தீயில்: அவ்வளவுதான், இந்த நடிகை யாரை எல்லாம் கை நீட்டினாரோ அந்த பெரிய புள்ளிகளின் ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் கொடுக்கும் பதிலடியால் நடிகையின் கணவரான நடிகரும் அவரைச் சார்ந்தவர்களும் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்களாம். இது குறித்து ஒரு முறை நடிகையிடம் எடுத்துக் கூறியதற்கு இனிமேல் சரியாக நடந்து கொள்கிறேன் என்று கூறியவர், அடுத்ததாக நடிகர் படத்திற்கு பிரச்னை வரும்போது, இதோ பாருங்க என்ன செய்கிறேன் என்று அவர் பகிர்ந்த சில பதிவுகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல மாறிவிட்டது.

பழனிக்கே பால் காவடி: இது மட்டும் இல்லாமல் நடிகையிடம் நடிகராலும் பெரிய அளவில் ஒரு விஷயத்தை எடுத்துக் கூறி அவற்றை சரி செய்து கொள்ள முடியாமல் தவிக்கிறாராம். நடிகரின் இந்த நிலையைப் பார்த்த பலரும் நீங்க பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் உங்க மனைவியை உங்க பேச்சைக் கேட்க வைப்பது சிரமம் என்று தெரிவித்து வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X