பெரிய பதவிக்கு அடிபோடும் உச்ச நடிகர்.. அதான் இப்படியெல்லாமா.. ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம்!
சென்னை: உச்ச நடிகர் பற்றி அப்படி உச்சிக் குளிர அந்த தயாரிப்பாளர் பேசியதற்கு காரணமே வரும் தேர்தலில் தங்களுக்கு சார்பாக அவர் வாய்ஸ் கொடுப்பார் என்கிற நினைப்பில் தானாம்.
ஆனால், தற்போது தனது சுயநலத்துக்காக உச்ச நடிகர் செய்து வரும் செயலால் தயாரிப்பு நிறுவனம் மட்டுமின்றி அந்த கட்சியும் கடுப்பாகி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

படத்தை பார்த்து இயக்குநரை கட்சித் தலைவரே பாராட்டியதற்கு எல்லாம் பின்னணியில் இருந்த அரசியல் கணிப்புகளை சுக்கு நூறாக உடைத்து விட்டாராம் உச்ச நட்சத்திரம்.
பெரிய பதவிக்கு ஆசை: இந்தியளவில் மிகப்பெரிய பதவிக்கு உச்ச நடிகர் ஆசைப்பட்டுத் தான் வட இந்திய அரசியல் பிரபலங்களுடன் அதிரடி மீட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். வரும் தேர்தலில் அந்த கட்சிக்கு ஆதரவு குரல் கொடுக்க ரெடியாகி விட்டதாகவும், அதற்கு கைமாறாக தனக்கு பெரிய பதவியை வழங்க வேண்டும் என நடிகர் பெரிய டீல் போட்டு வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
தயாரிப்பு தரப்புக்கு கஷ்டம்: அரசியல் கணக்குகளை குறி வைத்தே நடிகரின் படத்தை தயாரித்து பட விழாவில் பக்கம் பக்கமாக நடிகரை பாராட்டி அந்த தயாரிப்பாளர் பேசக் காரணமே அந்த நடிகரை வைத்து அரசியல் ரீதியாக ஆதாயம் தேடத்தான் என்றும் ஆனால், அனைத்தையும் தற்போது சுக்குநூறாக நடிகர் போட்டு உடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த கட்சித் தலைவரும் நடிகரின் செயலால் ரொம்பவே அப்செட் ஆக இருப்பதாகவும், போட்ட கணக்குகள் எல்லாம் வீணாய் போய் விட்டதே என அரசியல் வட்டாரமே ஆடிப் போய் இருப்பதாக கூறுகின்றனர்.
தனி ரூட்டில் நடிகர்: மத்தவங்க அவங்க அரசியல் லாபத்துக்கு போடும் கணக்கை எல்லாம் கண்டுக்காமல் விட்டு விட்டு தனக்கான லாப கணக்கை மட்டும் மனைவியின் அட்வைஸ் உடன் நடிகர் போட்டு வருவதாக கடுமையான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் கிளம்பி உள்ளன.
நடிகரின் படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருந்த மகளுக்கும் அடுத்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தற்போது கடும் அதிர்ச்சியையும் கவலையையும் நடிகர் கொடுத்து விட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











