எதையுமே ஒழுங்கா பண்ண தெரியல.. மகளால் அப்செட்டான உச்ச நடிகர்.. என்ன ஆகப் போகுதோ?

By Staff

சென்னை: கட்டிய கணவர் கைவிட்ட நிலையில், மகளின் ஆசைக்காக நடிக்க சம்மதம் தெரிவித்த அந்த உச்ச நடிகர் தற்போது மகளின் செயல்களால் அப்செட் ஆகி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுத்து விட்டு சினிமாவை விட்டே ஒதுங்கி விட வேண்டும் என முயற்சித்து வரும் நடிகருக்கு தொடர்ந்து ஃபிளாப் படங்களாகவே அமைந்து வருவதால், அடுத்தடுத்த படங்களில் மேலும், அதிக உழைப்பை கொட்டி நடித்து வருகிறார்.

Star actor upset over her daughter direction?

இளம் இயக்குநர்களை நம்பி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அந்த உச்ச நடிகர். மகளுக்கு சமீபத்தில் ஒரு வாய்ப்பை கொடுத்த நிலையில், ஆசை ஆசையாக செட்டுக்கு சென்ற நடிகருக்கு காத்திருந்த அதிர்ச்சியால் கடுப்பாகி விட்டாராம்.

அவதிப்பட்ட அப்பா: உச்ச நடிகரின் அரை நாள் கால்ஷீட்டுக்காக பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தவம் கிடந்து வரும் நிலையில், அப்பாவை அழைத்துக் கொண்டு ஹோட்டல் ரூமிலேயே ஷூட்டிங் எடுக்காமல் தங்க வைத்து கஷ்டப்படுத்தி விட்டாராம் அன்பு மகள்.

ஒரு சீன் எடுக்க முடியவில்லை என்றாலோ, ஒரு நடிகர் வரவில்லை என்றாலே அதற்கு மாற்றாக இன்னொரு ஏற்பாடை எப்போதுமே அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் செய்து வைப்பார்கள். அதிலும், உச்ச நடிகர் போன்றவர் நடிக்கும் படங்களில் இந்த ஏற்பாடுகளை எல்லாம் உதவி இயக்குநர்களே கச்சிதமாக தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், இதில் எதையுமே அந்த மகள் இயக்குநர்கள் செய்யவே இல்லை என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Star actor upset over her daughter direction?

அப்செட்டான உச்ச நடிகர்: தனது பொன்னான நேரத்தை இப்படி வீணடித்து விட்டாரே மகள் என உச்சக்கட்ட டென்ஷனில் உச்ச நடிகர் உள்ளாராம். ஏற்கனவே பலரும் சொல்லியும் அந்த காமெடி இயக்குநருக்கு படத்தை கொடுத்த நிலையில், அம்மிக் கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்தி வைத்திருப்பது போல அந்த படத்தைக் கொத்தி வைத்து விட்டதால் தான் அடுத்தடுத்த படங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறாராம் உச்ச நடிகர். ஆனால், ஒருத்தரும் அவரது விருப்பப்படி அவருக்கு ஏற்றவாறு வேலை செய்யவில்லை என்பதால் விரக்தி அடைந்திருக்கிறார் என்கின்றனர்.

எல்லாமே ஃபிளாப்: ஏற்கனவே கணவரை வைத்து அந்த பெரிய இடத்து வாரிசு இயக்கிய அனைத்துமே ஃபிளாப் ஆன நிலையில், தற்போது அப்பாவை வைத்து வீடியோ கேம் ஆடி வருகிறார் என கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான லுக் உள்பட எதுவுமே செட் ஆகவில்லை என ட்ரோல்கள் குவியத் தொடங்கி உள்ள நிலையில், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு அடுத்தடுத்த பெரிய துண்டு கன்ஃபார்ம் என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X