மக்களை நம்பாம மிஸ் பண்ணிட்டேனே.. மனக்குமுறலில் உச்ச நடிகர்.. மொத்தமாக முடிச்சு விட்ட மாஸ்!
சென்னை: பட்டத்தை அந்த நடிகர் பறிக்க வந்துட்டாரு என உச்ச நடிகர் புலம்பிய நிலையில், இந்த பட்டத்தை நீங்களே வச்சிக்கோங்க, நான் இன்னும் பெருசா வேற ஒரு பட்டத்தை மக்கள் கிட்ட இருந்து வாங்கிக்கிறேன் என மாஸ் நடிகர் மாஸ் காட்டியுள்ள நிலையில், உச்ச நடிகர் மனக்குமுறலில் இருக்கிறார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
பல வருடங்களாக மக்களையும் தன்னை நம்பி வந்த ரசிகர்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டு தொடர்ந்து நடித்து வருகிறார் உச்ச நடிகர் என ட்ரோல் குவிந்தாலும், தான் நின்றால் கண்டிப்பாக வெல்ல முடியாது என்கிற கருத்துக் கணிப்புகளை மட்டுமே நம்பி ஏமாந்துப் போய்விட்டார் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும் என்கின்றனர்.

உண்மையாகவே மாஸ் நடிகர் போல மக்கள் மீது மட்டும் முழுமையான நம்பிக்கை வைத்து இறங்கியிருந்தால் இந்நேரம் அந்த நடிகர் அரசியல் பக்கமே வந்திருக்க மாட்டார் என்கின்றனர்.
உஷார் இல்லாத உச்ச நடிகர்: தனக்கு மக்கள் மத்தியில் இருந்த மிகப்பெரிய செல்வாக்கை சரியாக பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் இருந்திருக்க இடமே வேறு என்கின்றனர். இத்தனை நாட்களாக மக்களை பெரிதாக நம்பாமல் இருந்து விட்டோமே என இப்போ ஃபீல் பண்ணி புலம்பி என்ன செய்வது என நடிகருக்கு சினிமா பிரபலம் ஒருவர் ஆறுதல் கூறியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மக்களை நம்பியதால்: மாஸ் நடிகர் தன்னிடம் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், மக்களின் அன்பு அதிகம் இருப்பதாக முழுமையாக நம்பி களத்தில் இறங்கியதால் தான் இந்த அளவுக்கு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்றும் இதெல்லாம் முன்பாகவே உச்ச நடிகருக்கு கிடைத்திருக்க வேண்டிய மகுடம் என்பதை அறிந்த நடிகரின் தீவிர ரசிகர்களும் ரொம்பவே அப்செட்டாக உள்ளதாக கூறுகின்றனர்.
அந்த படம் ஆரம்பிக்குமா?: உச்ச நடிகர் இப்படி டிராக் மாறி செல்லவே அவரது நண்பர் பாஸ் நடிகர் தான் காரணம் என்கின்றனர். இருவரும் இணைந்து நடிக்கும் படம் திட்டமிட்டபடி ஆரம்பிக்குமா? என்பதே கேள்விக்குறியாகத்தான் உள்ளது என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications