பாக்ஸ் ஆபிஸ் போட்டி.. இயக்குநரை பெரிய ரிஸ்கில் இழுத்து விட்ட உச்ச நடிகர்.. தப்பிப்பாரா?
சென்னை: டிவி நடிகர்கள் இருந்தாலே போதும் நல்ல படத்தை கொடுத்து கல்லா கட்டிவிடுவேன் என்கிற தைரியத்தில் குறைவான ஆட்களுடன் களமிறங்கிய அந்த இளம் இயக்குநரை பெரிய அளவிலான படமாக இதை மாற்றுங்க என திடீரென உச்ச நடிகர் டோட்டலாக மாற்றி இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
பல ஆண்டுகளாக உச்ச நடிகருக்கு போட்டி இல்லாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு பழைய நண்பர் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது நடிகரை மீண்டும் வசூல் போட்டிக்குள் இழுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படமே பான் இந்தியா படமாக மாறும் அளவுக்கு ஸ்கோப் இருக்கு என நினைத்து பெரிய ரிஸ்க்கை இயக்குநர் தலைமீது நடிகர் கட்டி விட்டார் என பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ட்ரோலில் சிக்கிய இயக்குநர்
அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹிட் ஆன நிலையில், எதை கொடுத்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என நினைத்து வானத்துக்கும் பூமிக்கும் பறந்த நிலையில், இயக்குநர் மீது எக்கச்சக்க ட்ரோல்களை போட்டு சர்வதேச அளவில் வச்சு செய்து விட்டனர். அந்த விமர்சனங்களை துடைத்து எறிய வேண்டும் என அடுத்த படத்தை பக்காவாக சிம்பிளாக செய்து முடிக்கலாம் என இயக்குநர் நினைத்து இருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் போட்டி
ஆனால், உச்ச நடிகரின் பழைய போட்டியாளரான பாஸ் நடிகர் திடீரென மிகப்பெரிய வசூல் வேட்டை நிகழ்த்திய நிலையில், உச்ச நடிகர் தனது இந்த படத்தின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என நினைத்து அதிரடியாக ஏகப்பட்ட மாற்றங்களை அவர் இஷ்டத்துக்கு செய்து வருவதால் இயக்குநர் தலையை பிய்த்துக் கொண்டு அலைந்து வருகிறாராம்.

பட்டம் பிரச்சனை
மேலும், தனக்கு பிறகு இண்டஸ்ட்ரியில் முளைத்த நடிகர்கள் எல்லாம் தன்னுடன் போட்டி போடுவதும், தனது பட்டத்துக்கு ஆசைப்படுவதையும் பார்த்து ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம் அந்த நடிகர். எல்லாருக்கும் ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் தனது பவர் என்ன என இந்த ஆண்டு காட்டி விட வேண்டும் என்கிற முனைப்பில் தானே களத்தில் இறங்கி பல வேலைகளை பார்த்து வருகிறாராம்.

மல்டி ஸ்டார் படமாக
பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் வெற்றி தான் முக்கியம் என உணர்ந்து கொண்ட உச்ச நடிகர் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை பல முன்னணி நடிகர்களை நட்பின் பேரில் அழைத்து இந்த படத்தை மல்டி ஸ்டார் படமாக மாற்றி உள்ளாராம். இயக்குநருக்கு அட்வைஸ் செய்ய அமர்த்தப்பட்ட இன்னொரு இயக்குநரின் அதிரடி வேலைகள் தான் இது எனக் கூறுகின்றனர்.

பெரிய சிக்கல்
ஒரு பெரிய நடிகரை இயக்கவே அந்த இளம் இயக்குநருக்கு நாக்கு தள்ளிவிடும் நிலையில், இத்தனை உச்ச நடிகர்களை வைத்து படத்தை என்ன வழி செய்ய போகிறாரோ என செட்டிலேயே பலரும் கிண்டல் அடித்து பேசி வருகிறார்களாம். அதனால் இயக்குநரும் சற்றே கலக்கத்துடன் காணப்பட்ட நிலையில், அவரை தேற்றி உள்ளாராம் நடிகர்.

உச்ச நடிகர் ஊக்கம்
பல சிக்கல்கள் வந்தாலும் அதை சரியாக செய்து விட்டால் பெரிய சிக்சர் அடித்து விடலாம் தம்பி மத்தவங்க பேசுறதை எல்லாம் காதில் வாங்கிக்காதீங்க, உங்க வேலையை பாருங்க.. எனக்கு நம்பிக்கை இருக்கு என உச்ச நடிகரே ஊக்கம் கொடுத்து வரும் நிலையில், துணிவுடன் இறங்கி விட்டாராம் அந்த இயக்குநர்.


Click it and Unblock the Notifications











