Don't Miss!
- News
நாட்டிலேயே எளிமையான முதல்வர் ஸ்டாலின்.. ஏற்றத்தாழ்வே காட்ட மாட்டாரு - அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம்
- Automobiles
உல்லாச கப்பலில் எல்லாத்தையும் அனுபவிக்க இப்படி ஒரு வழி இருக்கா? இதை எல்லாம் இப்பவே தெரிஞ்சு வெச்சுக்கணும்!
- Finance
உங்கள் வாகனம் தொலைந்துவிட்டதா? சாவி இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?
- Sports
அன்று யுவ்ராஜ் சிங், இன்று பும்ரா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை.. அதுவும் பிராட் பவுலிங்கில்..
- Lifestyle
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் !
சென்னை : கணவரை பிரிந்த அக்காவால், தங்கையின் குடும்பத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால், பிரபல நடிகர் மனவேதனையில் இருக்கிறார்.
பிரபல நடிகரின் வாரிசான அவர் சமீபத்தில், கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விட்டுப்பிரிந்தார்.
இவரை எப்படியாவது கணவருடன் சேர்த்துவைத்துவிட வேண்டும் என அந்த ஸ்டார் நடிகர் பல முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால், எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடித்தது.

மனவேதனையில்
என்னத்தான் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும், தனது மகள்களால், தீராத மனவேதனையில் இருக்கிறார் அந்த நடிகர். இப்படி பிரபல நடிகர் வருத்தத்தில் இருக்க அவரின் வாரிசு, கணவரை பிரிந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் முன்பைவிட, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், அடுத்தடுத்த படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதுவும் கோலிவுட்டில் இல்லை பாலிவுட்டில் ஒருபடத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த பிரபல நடிகரின் வாரிசு.

தங்கை குடும்பத்தில் சிக்கல்
மேலும், தான் இயக்க உள்ள பாலிவுட் படத்தில், தங்கையின் கணவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆனால், தங்கைக்கோ, தனது கணவர் சினிமாவில் நுழைவதில் துளியும் விருப்பம் இல்லையாம். இதுகுறித்து, அக்காவிடம் பேசி பயன் இல்லாததால், கணவரிடம் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால், தங்கையின் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

குழப்பத்தில்
பொருத்து பொருத்துப்பார்த்த தங்கை தனது, தந்தையிடம் பஞ்சாயத்தை கூட்டி உள்ளார். அக்காவை கண்டிக்குமாறும், தனது கணவரை வைத்து படம் எடுக்கும் முடிவை கைவிட வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனால் அந்த பிரபல நடிகர், எப்படி இந்த பிரச்சனையை சமாளிப்பது என தெரியாமல் மனவருத்தத்தில் உள்ளார்.

லெப்ட் அண்ட் ரைட்
ஏற்கனவே குழப்பத்திலும் மனவேதனையிலும் இருக்கும் அந்த பிரபல நடிகர் மீண்டும் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மற்றொரு பிரச்சனையால் குழம்பி போய் இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண அக்கா, தங்கை இருவரையும் அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.