தேவையில்லாம தலையிட்டு அப்பா பண்ண குளறுபடி.. அந்த படம் ரிலீஸ் ஆகாம இருக்க அதுதான் காரணமா?

By Staff

சென்னை: ஸ்டார் நடிகரின் ரீமேக் படம் பல ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில், இன்னமும் ரிலீஸ் ஆகாமல் இருக்க காரணமே அந்த நடிகரின் அப்பா தான் என மாஸ் நடிகர் படத்தில் நடித்து வரும் நிலையில், தனது சோகத்தை எல்லாம் செட்டில் கொட்டித் தீர்த்து இருக்கிறாராம் அந்த ஸ்டார் நடிகர்.

ஒரு காலத்தில் மாஸ் நடிகர், டாப் நடிகருக்கு எல்லாம் சவால் விடும் அளவுக்கு முன்னணி நடிகராக வலம் வந்த அந்த நடிகர் குடும்பத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தனது சினிமா வாழ்க்கையையே தொலைத்து விட்டார்.

Star actor worry about his unreleased movie due to his father interaction?

அதன் பின்னர் அவர் பல முறை மீண்டு விடலாம் என முயற்சி செய்தாலும் எடுத்து வைக்கும் அடியெல்லாமே அவருக்கு அடிமேல் அடி கொடுத்து அப்செட் ஆக்கியது.

ஸ்டார் நடிகர்: காதல் படங்களில் இவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட இளம் பெண் ரசிகைகளை தன் பின்னால் சுற்ற வைத்து வந்தவர் அந்த ஸ்டார் நடிகர். ஆனால், ஆக்‌ஷன் ஹீரோவாக அவர் அவதாரம் எடுக்க முயன்று எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. மேலும், குடும்ப பிரச்சனை காரணமாக அவரது சினிமா வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்து போனது.

ரீமேக் படமும் அப்பா பண்ண வேலையும்: பிரபல அண்ணன் இயக்குநரை வைத்து அந்த சூப்பர் ஹிட் ரீமேக் படத்தை பண்ணி கம்பேக் கொடுத்து விடலாம் என நடிகர் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தார். ஆனால், தேவையில்லாமல் அவரது அப்பா தலையிட்டு பிரச்சனை பண்ணதில், அந்த இயக்குநர் மட்டுமின்றி மேலும், சில இயக்குநர்கள் எல்லாம் ஆளவிடுடா சாமி என அப்ஸ்காண்ட் ஆகி விட்டனர். கடைசியில் அந்த நடிகரின் அப்பாவே நானே இந்த படத்தை பண்ணிக் காட்டுறேன் என சவால் விட்டு அம்மிக் கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்தியது போல ஆக்கி விட்டார்.

புலம்பிய நடிகர்: கஷ்டத்தில் இருந்த நடிகருக்கு மாஸ் நடிகர் தனது படத்தில் நடிக்க வாய்ப்புத் தந்து தற்போது காப்பாற்றி உள்ளார். இந்நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது படம் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்றும் அனைத்துக்கும் தனது தந்தை தான் காரணம் என ஸ்டார் நடிகர் பேசியிருப்பதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X