அந்த வெப்சீரிஸில் நடிச்சதில் இருந்தே நெருக்கம் ஆகிட்டாங்களாம்.. ரகசிய குடித்தனம் நடத்தும் நடிகர்கள்!

By Staff

சென்னை: சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் அந்த ஒல்லி நடிகையும் பிரபலமானவர்.

பெரிய படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் சிறிய நடிகர்களின் படங்களில் தொடர்ந்து விடாமல் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், வெப்சீரிஸில் அவருடன் இணைந்து நடித்த நடிகருடன் ரகசியமாக குடித்தனமே நடத்தி வருகிறார் என பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

மும்பை, கேரளா, ஆந்திரா என பக்கத்து ஸ்டேட்களில் இருந்து நடிகைகள் படையெடுத்து வந்த நிலையில், தற்போது டப்பிங் பிரச்சனையை தடுக்க ஏகப்பட்ட சீரியல் நடிகைகளை ஹீரோயின்களாக மாற்றி வருகின்றனர் இளம் இயக்குநர்கள். குறைவான சம்பளத்துக்கு நடிப்பார்கள் மற்றும் டப்பிங் செலவு எல்லாம் தனியாக தேவைப்படாது என இந்த ரூட்டை பலரும் பின்பற்றி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் தாராளம்

இன்ஸ்டாகிராமில் தாராளம்

சீரியல் நடிகைகளும் சினிமா வாய்ப்பை பிடிக்க தங்களுக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் எந்தவொரு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தாமல் கண்ட மேனிக்கு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி போஸ் கொடுத்து வந்தாலே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஜொள்ளு விட்டு வந்து வாய்ப்பை கொடுப்பார்கள் என தொடர்ந்து போட்டோஷூட்களாக நடத்தி வருகின்றனர்.

ரகசிய குடித்தனம்

ரகசிய குடித்தனம்

ரொம்ப காலமாகவே சின்ன பொண்ணாகவே நடித்து வந்த அந்த சீரியல் நடிகைக்கு சமீப காலமாக ஏகப்பட்ட ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதிக சம்பளம் கேட்டால் வாய்ப்பு அடுத்த இன்ஸ்டாகிராம் பியூட்டிக்கு பறி போய்விடும் என்பதை உணர்ந்து கொண்டு கொடுப்பதை வாங்கிக் கொண்டு நடித்து வரும் அந்த நடிகை சமீப காலமாக பிரபல நடிகர் ஒருவருடன் ரகசிய குடித்தனம் நடத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் கோடம்பாக்கத்தில் புகைந்து வருகின்றன.

வெப்சீரிஸ் தான் காரணம்

வெப்சீரிஸ் தான் காரணம்

அந்த சீரியல் நடிகையுடன் பிரபல நடிகர் வெப்சீரிஸ் ஒன்றில் இணைந்து நடித்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டதாம். ஆனால், வீட்டில் எல்லாம் தெரிந்து விட்டால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்பதால், நடிகையுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறாராம். சமீபத்தில் அந்த தகவல்கள் லீக்கான நிலையில், நடிகர்கள் இருவரும் எப்படி இந்த மேட்டர் லீக் ஆச்சு என்கிற அதிர்ச்சியில் உள்ளனர்.

திருமணத்தில் விருப்பமில்லை

திருமணத்தில் விருப்பமில்லை

நடிகர்கள் இருவருமே இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில், திருமணம் செய்து கொண்டால் தான் என்ன என்று அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆலோசனை வழங்கிய நிலையில், இருவருக்கும் திருமணத்தில் லாக் ஆகும் எண்ணமே இல்லை என கூறிவிட்டார்களாம். லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இருவரும் விஷயம் வெளியே கசிந்த நிலையில், என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X