அந்த நடிகர் என் கிட்டயே வரக்கூடாது.. இயக்குநரிடம் கறார் கண்டிஷன் போட்ட நடிகை.. அனுபவம் அப்படி

By Staff

சென்னை: திரையுலகில் நடிகையாக ஜொலிக்க வேண்டும், புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு வரும் இளம் பெண்களுக்கு இங்கு சவால்களும் ஏமாற்றங்களும் புதியதல்ல. நல்லவர்கள் வேடம் போட்டு உலாவும் சில 'நரிகளால்' வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர் உண்டு. ஆனால், இந்த மாய உலகத்தைப் பற்றி நன்கு தெரிந்தும், எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என்று கறாரான சில முடிவுகளை எடுத்துள்ளார் அந்த வாரிசு நடிகை.

சமீபகாலமாக ஓரளவு கவனம் ஈர்த்து வரும் அந்த நடிகை, தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இயக்குநரை நேரில் சந்தித்த நடிகை, ஒரு அதிரடி கண்டிஷனை போட்டுள்ளாராம். அதாவது, "இந்தப் படத்தின் கதையைக் கேட்டும், உங்களை நம்பியும் மட்டும்தான் நான் நடிக்க சம்மதித்தேன். ஆனால், படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்கும் அந்த குறிப்பிட்ட நடிகர் மட்டும் என் பக்கமே வரக்கூடாது. ஷாட் முடிந்ததும் அவர் கேரவனுக்குள் சென்றுவிட வேண்டும். அநாவசியமாக என்னிடம் பேசவோ, பழகவோ கூடாது" என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன இயக்குநர், "ஏன்ம்மா... படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகணுமே, ஏன் இப்படி சொல்றீங்க?" எனக் கேட்க, அதற்கு நடிகை சொன்ன காரணம் தான் தற்போதைய கோலிவுட் ஹாட் டாபிக்.

Star Actress Puts Strict Condition on Director Refuses Close Interaction with Co-Star After Bad Experience

ரொம்ப மோசம்: "ஏற்கனவே ஒரு படத்தில் அவருடன் நடித்த அனுபவம் எனக்கு மிக மோசமானது. படப்பிடிப்புக்கு முன்பே 'நன்கு இணக்கமாக நடிக்க வேண்டும்' என்று கூறி, தயாரிப்பாளர் செலவில் தனித்தீவு ரிசார்ட்டுகளுக்கு டிரிப் கூப்பிடும் ரகம் அவர். அப்படிச் சென்றுவிட்டு, பிறகு படப்பிடிப்புத் தளத்தில் ஓவராக அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்வார். அவரோடு நடித்தால் என் கேரியரே திசைமாறிப் போய்விடும். தயாரிப்பாளர்களின் பணத்தை இப்படி ஊர்சுற்றப் பயன்படுத்தும் நபர்களிடம் நான் தள்ளியே இருக்க விரும்புகிறேன்," என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

தயாரிப்பாளர் நிம்மதி: ஆரம்பத்தில் தாராள மனதுடன் வாய்ப்புகளைத் தேடினாலும், திரையுலகின் நிஜ முகத்தைக் கண்டுகொண்ட அந்த நடிகை, இப்போது உஷாராகிவிட்டார். நடிகையின் இந்த திடீர் 'கறார்' கண்டிஷனால், அந்த நடிகரின் முகம் சுருங்கிப் போயுள்ளதாம். "இவங்க கூத்தடிக்க நாம ஏன் காசு கொடுக்கணும்?" என்று புலம்பும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், இந்த நடிகையின் முடிவு பாராட்டைப் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X