For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விவாகரத்து டிராமாவை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்த நட்சத்திர ஜோடி.. ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கு?

  By Staff
  |

  சென்னை: அடிக்கடி ஒண்ணா இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சூப்பர் ஜோடி என பெயர் எடுத்து வந்த அந்த நட்சத்திர தம்பதியை சுற்றி குறிப்பாக கடந்த ஒரு மாதமாக ஏகப்பட்ட வதந்திகள் நிரம்பி வழிந்தன.

  இந்த விவாகரத்து வதந்திகளுக்கான வேலை தற்போது முடிந்த நிலையில், டிராமாவை முடித்துக் கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  ஆனாலும், இதில் ஒரு சிக்கல் இருப்பதால் இருவரும் தனித் தனியாக இந்த மேட்டரை கையாண்டு வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

  பிரபல நடிகரின் அப்பாவுடன் ஜோடி போடும் விஜய் பட ஹீரோயின்... யாரு கூடன்னு பாருங்க! பிரபல நடிகரின் அப்பாவுடன் ஜோடி போடும் விஜய் பட ஹீரோயின்... யாரு கூடன்னு பாருங்க!

  வேறு நடிகருடன் காதல்

  வேறு நடிகருடன் காதல்

  விவாகரத்து வதந்தியில் சிக்கியுள்ள சமத்து நடிகைக்கும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் அந்த நடிகருக்கும் இடையே ஏற்பட்ட காதல் கடைசியில் கை கூடாமல் போன நிலையில், வசதியான பெரிய குடும்பத்து பிள்ளையாக பார்த்து செட்டில் ஆகி விட்டார் அந்த நடிகை.

  கண்டிஷன் போட்டு

  கண்டிஷன் போட்டு

  நடிகையின் மீது காதலில் விழுந்த அந்த நடிகரிடம் திருமணத்துக்கு பிறகும் என் இஷ்டத்துக்கு தான் நடிப்பேன். அதில், யாரும் தலையிடக் கூடாது என்றும் குடும்பத்தில் பெரியவர்கள் யாராவது இந்த விவகாரத்தில் தலையிட்டால் பிரிந்து போய்விடுவேன் என கண்டிஷன் போட்டே நடிகை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

  நடிப்பு குடும்பம்

  நடிப்பு குடும்பம்

  குடும்பமே நடிகர்கள் என்பதால் நடிகையின் இந்த கண்டிஷன் அவர்களுக்கு ஒன்றுமே பெரிதாக தெரியவில்லை. அனைவருக்கும் அனைத்து விஷயங்களும் தெரியும் என்பதால் இவரை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து குடும்பப் பாங்கான படத்தில் நடித்து வந்த அந்த நடிகை அடிக்கடி படு கிளாமராகவும் நடித்த போதும் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் தான் இருந்து வந்தது.

  அப்படி நடித்தும்

  அப்படி நடித்தும்

  சமீபத்தில் அந்த நடிகை நடிப்பில் வெளியான சர்ச்சைக்குரிய வெப் தொடரில் உடலுறவு காட்சிகள் உள்ளிட்ட படு போல்டான பல காட்சிகளில் நடிகை நடித்த போதும் கணவர் நடிகர் கண்டிக்காமல் பாராட்டத்தான் செய்தார். ஆனால், தற்போது சுற்றி வரும் விவாகரத்து வதந்திக்கு அதையே காரணமாக்கி ஈசியாக பிரச்சனையை பெரிதாக்கினர்.

  எல்லாமே டிராமா

  எல்லாமே டிராமா

  ஆனால், இந்த விவாகரத்து வதந்தியே பெரிய டிராமா என்றும் கணவரின் படத்தின் புரமோஷனுக்காக இப்படியொரு படு மோசமான யுக்தியை பயன்படுத்தியதாகவும் சோஷியல் மீடியாவில் நடிகையை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் வெளியாகி வந்தன.

  முடிவுக்கு கொண்டு வர

  முடிவுக்கு கொண்டு வர

  எதிர்பார்த்தபடியே எல்லாம் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இந்த பிரச்சனையை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வர கணவனும் மனைவியும் தனித் தனியே மறைமுகமாக இதெல்லாம் உண்மையில்லைங்க.. வெறும் வதந்தி தான்.. ஏன் இப்படி கிளப்புறாங்கனே தெரியல என பேசி வருகின்றனர். இதுவரை ஏன் இது குறித்து பேசவில்லை என்கிற கேள்வியை வைத்தால், நான் அப்போ நடிப்பில் பிசியாக இருந்தேன் என்றும் சாக்கு போக்கு கூறி வருகின்றனர்.

  பெரிய சிக்கல்

  பெரிய சிக்கல்

  இந்த பிரச்சனையில் நேரடியாக நெத்தியடி பதில் போல இருவரும் இணைந்து ஒரு வீடியோ போட்டு இல்லை என்று கூறிவிடலாம். ஆனால், அதனை இருவருமே தவிர்த்து வருகின்றனர். அது ஏன் என்று விசாரித்தால் அதில் ஒரு பெரிய சிக்கலே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  பெரியவர்களுக்கு பிடிக்கவில்லை

  பெரியவர்களுக்கு பிடிக்கவில்லை

  இந்த விவகாரம் வெளியாகி குடும்ப மானத்தையே கெடுத்து விட்டதாக குடும்பத்து பெரியவர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளதால், இந்த விவகாரம் அந்த அளவுக்கு சுமூகமாக முடிந்து விடும் என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. மேலும், நடிகையின் சமீபத்திய நடவடிக்கைகள் ஏதும் நிஜமாகவே அந்த குடும்பத்து பெரியவர்களுக்கு பிடிக்கவில்லையாம். என்ன இப்படி ஆகிப்போச்சு?

  English summary
  Star Couple plans to end the divorce drama soon details leaked in cinema circle, but also an another big problem is grown against over stars plans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X