ஆம்பள அழுதா போச்சு.. காதலியுடன் ஒரே வீட்டில்.. ஜீவனாம்சம் கொடுக்காமல் தப்பிக்க கண்ணீர் டிராமா?

சென்னை: பிரபல நடிகர் ஒருவர் தனது மனைவியை பிரிந்து தோழியுடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் குடும்பத்தில் பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி கோலிவுட்டே அதிரும் அளவிற்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பேட்டியில் தனது குடும்ப வாழ்க்கை குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறியதுடன், தன்னை விட்டு பிரிந்த தோழியை நினைத்து கண்கலங்கியபடி பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல சினிமா பிரபலம் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதில், பொம்பள சிரிச்சா போச்சு, ஆம்பள அழுத போச்சு, எந்த சூழ்நிலையிலும் ஒரு ஆண் இப்படி அழுது பேட்டி கொடுக்கக்கூடாது. அந்த நடிகர் சொன்ன பல விஷயங்களும் உண்மையல்ல. மனைவியுடனும், குடும்பத்துடனும் வரும் பிரச்சனை இப்படியே பொது இடத்தில் பேசுவது. அந்த நடிகர் மனைவி பற்றி குழந்தைகள் பற்றி யோசிக்கவில்லை.

Gossip kishu kishu Tamil cinema gossip

எல்லாமே பொய்: திருமணத்திற்கு முன் அந்த பெண் தான் வேண்டும் என காதலுக்காகவே அவர் பல முறை உணர்ச்சி வசப்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். நடிகரின் செயலை பார்த்து பயந்து போன குடும்பத்தினர் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், இப்போது அந்த காதல் மனைவியை வேண்டாம் என்று சொல்கிறார். அவர் சொல்வது எல்லாமே பொய், தற்போது தோழி தன்னை விட்டு சென்றுவிட்டார் என்று சொல்லி நாடகமாடுகிறார். ஆனால், உண்மையில் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். இருவரும் தொடர்பில் தான் இருக்கிறார்கள்.

நாடகம்: அந்த நாடகத்திற்கு காரணம் என்னவென்றால், நடிகரின் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. அதில் மனைவி ஜீவனாம்சம் கேட்டு வருகிறார். அந்த ஜீவனாம்சம் தரக்கூடாது தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லுவதற்காகத்தான் நடிகர் இப்படி பொய் பேசி வருகிறார். தற்போது அந்த நடிகருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தொடங்கப்பட்ட சில படங்களும் பாதியிலேயே நிற்கிறது. இதனால் தான் பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாக இப்படி ஒரு நாடகம் நடக்கிறது. தோழி பிரிந்து போனதும், ஆன்மிக பயணம் சென்றது போலவும், முக்கிய அரசியல் தலைவரை சந்திக்க முயன்றார். ஆனால், அது நடக்காததால் அமைச்சரை மட்டும் சந்தித்து திரும்பியதும் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தற்போது கோலிவுட்டில் பரபரப்பான கிசுகிசுவாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X