பூசாரியான நடிகரை டார்கெட் செய்ய கடவுள் அவதாரம் எடுத்தவருக்கு அக்கட தேசத்தில் இருந்து தேவையில்லாத வம்பு!

சென்னை: இந்த நடிகர் வாரிசு நடிகர் தான் என்றாலும், திரை உலகில் இவருக்கு என்று தனி வரவேற்பு எப்போதும் உள்ளது. குறிப்பாக இவரது நடிப்பிற்காக இவரைக் கொண்டாடுபவர்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் மட்டும் கல்லாக் கட்டினால் போதாது இந்திய அளவில் கலக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வலம் வரும் இந்த நடிகருக்கு திறமையில் எந்த குறைச்சலும் இல்லை.

இவரால் திரை உலகில் பலனடைந்த பலருமே இன்றைக்கு அவரை வாசல்படிக் கல்லாக போட்டு மிதித்துக் கொண்டுதான் இருக்கிறார்களே தவிர தன்னையும் தான் செய்த உதவியையும் நினைத்துப் பார்ப்பதே இல்லை என்ற கோபம் அவருக்கு இருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு தீராத கோபம் உள்ளது. இதை எல்லாம் தெரிந்து கொண்ட நடிகரோ, ரசிகர்களை சாந்தப்படுத்த அவ்வப்போது ஏதாவது செய்து வருகிறார்.

Star Hero s Divine Avatar Sparks Buzz Telugu Film Clash Adds Fresh Twist to Kollywood Gossip

அதன் அடிப்படையில் அந்த நடிகரை பயன்படுத்தி சினிமாவில் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கிய நடிகர், அதன் பின்னர் வளர்த்த கிடா மார்பில் முட்டியது போல, நடிகரின் படத்தையே எதிர்த்து தனது படத்தை ரிலீஸ் செய்து, நடிகரின் பிசினஸை சீர் குலைத்தார். ஆனாலும் ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்த நடிகரை அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் பல கட்ட கோரிக்கைகளை முன் வைத்து, அந்த நடிகரை எதிர்த்து படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது என்று முடிவெடுத்தாராம்.

இதனால், அந்த நடிகர் தற்போது பூசாரி கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் அந்த நடிகருக்கு எதிராக படத்தை எடுப்பது என்பது வெறுமனே படமாக மட்டும் இருக்கக் கூடாது, அது பாடமாகவும் இருக்க வேண்டும் என்பதால், கடவுள் அவதாரம் எடுத்து நடிக்க முடிவெடுத்தாராம் நடிகர். இதனால் தனது அபிமான இயக்குநருடன் இணைந்து அடுத்த படத்தில் கமிட் ஆகி உள்ளாராம். நடிகரின் டார்கெட்டை விட, தற்போது புது பஞ்சாயத்து தொடங்கி உள்ளது என்பது நடிகரின் நெருங்கிய வட்டாரத்தில் பேச்சுக்களாக உள்ளது. அதாவது, தெலுங்கு நடிகரின் படத்துடன் பஞ்சாயத்தை கூட்டி விட்டது யார் என்று பேசி வருகிறார்கள் என்று திரைத்துறையில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X