கோடிக்கணக்கில் நஷ்டம் ஆனா சும்மா இருப்பாங்களா?.. ஒளிமையமான நடிகை ஒப்பாரி வைக்க அதுதான் காரணமாமே!
சென்னை: கணவர் படம் கவுந்து போன கப்பல் போல ஆனதால் தான் தென்னிந்தியாவையும் தென்னிந்திய ரசிகர்களையும் ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்கி வருகிறாராம் அந்த ஒளிமையான நடிகை. என சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சில நடிகர்கள் வேண்டுமென்றே தனது கணவரை காலி செய்ய வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபடுவதாக பலமாக நம்பும் நடிகை கணவரை வேறு மாநிலத்தில் ஸ்டார் ஆக்கும் எடுத்த முயற்சிகளும் பெரிதாக கைகொடுக்காத நிலையில் ரொம்பவே கவலையில் உள்ளாராம்.
நடிகருக்கும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் மனதளவில் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகிறார் என்றும் சமூக வலைதள ட்ரோல்கள் அவரையும் அவரது குடும்பத்தையுமே ரொம்பவே பாதித்துள்ளது என்கின்றனர்.

ஒரு கட்டத்தில் நடிகையையே நடிகர் பிரியும் அளவுக்கும் சென்றுவிட்டார் என்றும் ஆனால், குழந்தைகள் தான் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு முக்கிய காரணம் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரைட்டுக்கு போன ஃப்யூஸ்: பிரைட் நடிகருக்கு ஒளிமையமான எதிர்காலம் கிடைக்கும் என நடிகையை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், அவர் நினைத்ததை போல முன்னணி இடம் கிடைத்தாலும் பல ஆண்டுகள் அது நிலைத்து நிற்காமல் போய்விட்டது தான் ரொம்பவே பாதித்து விட்டதாக கூறுகின்றனர். நடிகர் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள் எல்லாம் வேஸ்ட்டாக ஆகி வருவதால் ரொம்பவே வெக்ஸ் ஆகிவிட்டார் என்கின்றனர்.
பல கோடி போச்சு: இந்த படத்தை ஓவராக புகழ்ந்து எப்படியாவது ரசிகர்கள் தலையில் கட்டி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நடிகருக்கு பெரிய ஆப்பாக அவரது ரசிகர்களே படத்தை கொண்டாடாமல் வசூலில் பலமான அடியை வாங்கிக் கொடுத்த நிலையில், பல கோடி ரூபாய் அந்த நடிகரின் குடும்பத்துக்கு இழப்பாக மாறிவிட்டது என்கின்றனர். அந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் நடிகரின் மனைவி வாய்க்கு வந்தபடி மனக்கஷ்டத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து வருகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
நடிகருக்குத்தான் சிக்கல்: ஆனால், நடிகை தொடர்ந்து இப்படி புலம்பி ஒப்பாரி வைத்து வருவது அவரது கணவருக்குத்தான் மேலும், திரைத்துறையில் சிக்கல்களை உருவாக்கும் என்பதை கூட நடிகை புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு இருப்பதால் தான் நடிகை திரையுலகையும் ரசிகர்களையும் குறை கூறி வருகிறார் என்கின்றனர். ஆனால், நடிகர் புலம்பல்களை எல்லாம் தவிர்த்துவிட்டு அடுத்து எப்படி தன்னுடைய இடத்தை பிடிக்க போராட வேண்டும் என முயற்சி செய்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே அவருக்கான வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











