புருஷனை மறைச்சு வை: நடிகையை பார்த்து பயப்படும் ஸ்டார் மனைவிகள்
மும்பை: இளம் நடிகை ஒருவரை பார்த்தால் நடிகர்களின் மனைவிமார்கள் ஒதுங்கிப் போகிறார்களாம்.
பாலிவுட்டில் இளம் நடிகை ஒருவருக்கும், திருமணமான சீனியர் ஹீரோவுக்கும் இடையே தொடர்பு என்று பேசப்படுகிறது. யார் விஷயத்திலும் தலையிடாத அந்த ஹீரோ நடிகையின் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதால் தான் இந்த பேச்சு கிளம்பியது.
இந்த கள்ளத்தொடர்பு பேச்சால் நடிகருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

நடிகை
அதே நடிகையின் பெயர் திருமணமான இளம் நடிகர் ஒருவருடனும் அடிபட்டது. இருவரும் ஜோடியாக ஹோட்டலில் இருந்து வெளியே வர அந்த செய்தி தீயாக பரவியது. அந்த நடிகரோ பதறிப் போய், அய்யய்யோ எங்களுக்கு இடையே எதுவும் இல்லை. சும்மா நட்பு ரீதியில் சந்தித்தேன். பொண்டாட்டி ஊரில் இல்லாததால் அழைத்து வரவில்லை. இல்லை என்றால் அவருடன் தான் வந்து நடிகையை பார்த்திருப்பேன் என்றார்.

வதந்தி
இளம் நடிகர் விஷயம் அடங்கிவிட்டது என்றாலும் சீனியர் நடிகர் விவகாரம் இன்னும் அடங்கவில்லை. நடிகையும் எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. இதையடுத்து அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள், எனக்கென்ன வந்தது என்று நடந்து கொள்கிறார்.

பாலிவுட்
நடிகை தன்னை பற்றி விளக்கம் அளித்து விளக்கம் அளித்து டயர்டாகிவிட்டார். அவர் பேச்சை யாரும் நம்புவதாக இல்லை. இந்நிலையில் பிற நடிகர்களின் மனைவிமார்கள் நடிகையை பார்த்தால் ஒதுங்கிச் செல்கிறார்களாம். அவ வரா, புருஷனை மறைத்து வை என்று சொல்லி கிண்டல் செய்கிறார்களாம்.

கிசுகிசு
இந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை புதிது அல்ல. ஏற்கனவே இப்படி ஸ்டார்களின் மனைவிகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட நடிகை ஒருவர் தற்போது ஊர், உலகம் எல்லாம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பெரிய ஆளாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











