பாஸ் நடிகர் பண்ண அந்த செயல்.. உச்ச நட்சத்திரத்துக்கு கொஞ்சம் கூட பிடிக்கலையாம்.. ஈகோ கிளாஷ் ஆரம்பம்?
சென்னை: சமீப காலமாகவே உச்ச நட்சத்திரத்துக்கும் பாஸ் நடிகருக்கும் இடையே கடும் போட்டி சினிமாவில் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் செம ஆக்டிவாக இளம் நடிகர்களுக்கு இணையாக சண்டைப் போட்டு வருகின்றனர்.
நம்பர் ஒன் என சொல்லிக் கொண்டு திரிந்த நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டி உட்கார வைத்து விட்டார் பாஸ் நடிகர் என்பதால் பல முனைப் போட்டிகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பாஸ் நடிகர் சமீபத்தில் பண்ண ஒரு விஷயத்தால் உச்ச நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

சண்டை வரை சென்ற போட்டி
தனக்கு பின் வந்து தன்னை மிஞ்சி விட்டாரே உச்ச நடிகர் என்கிற மனக்கசப்பு இல்லாமல், தனக்கு பிடித்த விஷயங்களை படமாக இயக்கி அவருக்கான ஸ்பேஸை பாஸ் நடிகர் அதிகமாகவே விட்டுக் கொடுத்து விட்டார். ஆனால், பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் பிளாக்பஸ்டர் கொடுத்த நிலையில், சமூக வலைதளங்களில் பாஸ் நடிகர் ரசிகர்களுக்கும் உச்ச நடிகர் ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு மட்டுமின்றி நடிகர்கள் இடையேயும் கடும் போட்டி நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

அத்தனைக்கும் ஆசைப்படு
எப்படியாவது மீண்டும் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து வசூலில் மீண்டும் ராஜாவாக வேண்டும் என்கிற முனைப்புடன் ஒரு படத்துக்கு பல படங்கள் என திடீரென அதிக படங்களில் கமிட் ஆகி வருகிறார் அந்த உச்ச நடிகர். ஏனென்றால் இதுக்கு முன்னாடி அவர் நடித்த சில படங்கள் சொதப்பிய நிலையில், இந்த படம் மிஸ் ஆனாலும், அடுத்த படம் பந்தயம் அடிக்கும் என நினைத்து வருகிறாராம்.

ஆசைக்காட்டி அல்வா கொடுத்துட்டாரு
இளம் இயக்குநர் ஒருவரை பாராட்டிய உச்ச நடிகர் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என கதையை கேட்டு பல நாட்களாக அந்த இயக்குநரின் நேரத்தை வீணடித்து கடைசியாக அந்த இயக்குநருக்கு ஆசைக்காட்டி அல்வா கொடுத்துட்டாரு உச்ச நடிகர். அந்த இயக்குநரை போலவே மேலும், சில இளம் இயக்குநர்களை நம்ப வைத்து கடைசியில் போயிட்டு வாங்க தம்பிகளா என டாட்டா காட்டி இருக்கிறாராம்.

நம்ம கிட்ட வாங்க
உச்ச நடிகர் உசுப்பேத்தி விட்டு கடைசியில் குட் பை சொல்லி அனுப்பிய நிலையில், அந்த இளம் இயக்குநருக்கு ரெட் கார்டு போட்டு நம்ம கிட்ட வாங்க என பாஸ் நடிகர் சமீபத்தில் பண்ண வேலையால் உச்சகட்ட கோபத்தில் உச்ச நடிகர் உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

ஈகோ கிளாஷ்
எல்லா விஷயத்திலும் மீண்டும் நம்முடனே அந்த நடிகர் போட்டிக்கு வருவது ஏன்? என்கிற குழப்பத்தால் நடிகர் மீது ஈகோ கிளாஷ் ஆகி உள்ளாராம் உச்ச நடிகர் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இருவருக்கும் நடக்கும் பனிப்போரில் மற்றவர்கள் சிக்கி மண்டை உடையாமல் இருந்தால் சரி என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











