»   »  சுபா புஞ்சாவின் நிஜ டூயட்!

சுபா புஞ்சாவின் நிஜ டூயட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருடிய இதயத்தை நாயகி சுபா புஞ்சாவும், ஹீரோ ரோஹனும் ஷூட்டிங் நேரம் போக, தனிப்பட்ட முறையிலும் டூயட் பாடி வருவதாக கூறுகிறார்கள்.

ரோஹன் யாருன்னு தெரியும்ல? நம்ம ஷெரீனோட முன்னாள் காதலர். ஷெரீனுக்கும், ரோஹனுக்கும் மிகத் தீவிரமான காதல் இருந்தது. அந்தக் காதலால்தான் வந்தவாய்ப்புகளையெல்லாம் பறி கொடுத்து விட்டு பாடாவதியாகிப் போனார் ஷெரீன்.

இப்போது விளம்பரப் படங்களில் நடித்து காலம் தள்ளி வருகிறார்.

அதே ரோஹன்தான் இப்போது திருடிய இதயத்தை என்ற படத்தை தயாரித்து, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக படு பயங்கரமாக கவர்ச்சி காட்டிகலக்கி வருகிறார் சுபா புஞ்சா.

அவரது வாய் பஞ்சர் ஆகும் அளவுக்கு முத்த மழை பொழிந்தும், கடித்தும், குதறியும் கலக்கி வருகிறார் ரோஹன்.

படத்தில் ரோஹனுடன், சுபாவுக்கு நெருக்கமான பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். டப்பிடிப்பிலேயே இருவரும் பின்னிப் பிணைந்து யூனிட்டை சூடாக்கிவருகிறார்கள். அது தவிர ஷூட்டிங் முடிந்த பிறகும் இருவருக்கும் இடையே தனிப்பட்ட படப்பிடிப்பு தொடருகிறதாம்.

இதை வைத்துப் பார்க்கும்போது இருவருக்கும் காதல் முற்றி விட்டதாகவும், பிரிக்க முடியாத அளவுக்கு இருவரும் பின்னிப் பிணைந்து காதலித்து வருவதாகவும் பேச்சுஅடிபடுகிறது. ஆனால் இந்தக் காதல் குறித்த செய்திகளை இருவரும் மறுக்கவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை.

ஏற்கனவே ஷெரீனை ஃபீல்டை விட்டு விரட்டி விட்டாயிற்று, இப்போது சுபா புஞ்சாவா? பார்த்துப்பா பெண் பாவம் பொல்லாதது தம்பி ரோஹன்.

இந்தப் படம் தவிர இப்போது சண்முகா என்ற படத்திலும் இளமை என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் சுபா புஞ்சா.

சண்முகாவில் அவருக்குக் கதாநாயகன் நடிகை ஷாலினின் அண்ணன் ரிச்சர்ட். சென்னை, பெங்களூர் என பெரு நகரங்களில் டிவிடி, விசிடி கடைகளை செயினாகநடத்திக் கொண்டே சினிமாவிலும் அவ்வப்போது, (எந்தப் பாடு பட்டாவது) தலை காட்டி வருகிறார் ரிச்சர்ட்.


இதிலும் முத்தக் காட்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் சுபா.

அதே போல இளமை படத்தில் சுபாவுக்கு வேலை இளமையைக் காட்டுவது தான். அதிலும் இயக்குனரை ரொம்பவே திருப்திப்படுத்தி வருகிறார் சுபா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil