ஷூட்டிங் போய் 7 வருஷம் ஆகுது.. டைரக்‌ஷனே மறந்துடும் போல இருக்குன்னு புலம்பிய வெற்றி இயக்குநர்?

By Staff

சென்னை: "இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குறானே, இவன் ரொம்ப நல்லவன்" என கிரி படத்தில் வடிவேலு காமெடி வருவது போல கடந்த 7 வருஷமா ஒரு இயக்குநரை பல முன்னணி நடிகர்கள் போட்டு பந்தாடி வருவதாகவும் இதுவரை தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க முடியாமல் இயக்குநர் திணறி வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

முதல் படத்திலேயே பாலிவுட் படம் போல இருக்கேன்னு அவரது உழைப்பை பலரும் பாராட்டினர். அடுத்த பிரம்மாண்ட இயக்குநரே இவர் தான் என்கிற அளவுக்கு பில்டப்புகள் எல்லாம் பலமாக இருந்தன. ஆனால், இன்று வரை அவர் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியாத அளவுக்கு சிறைவாசம் போல அனுபவித்து வருகிறார் என்பது தான் வேதனையான விஷயம் என்கின்றனர்.

Successfull Director feels very bad of wasting his 7 years without going to shooting for his next
Photo Credit:

சமீபத்தில், சினிமா பிரபலம் ஒருவரிடம் 7 வருஷமா ஷூட்டிங்கே போல, புதுசா பலர் வாரத்துக்கு ஒருவர் களமிறங்கி கலக்கி வருகின்றனர். எனக்கு டைரக்‌ஷனே மறந்துடும் போல இருக்குன்னு சொல்லியே புலம்பித் தள்ளிட்டாராம்.

டைரக்டர்களை சிறை வைக்கும் ஹீரோக்கள்: முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரைத்துறையை திரும்பி பார்க வைக்கும் ஒரு சில இயக்குநர்களை சமீப காலமாக சில பிரபல நடிகர்கள் சிறை வைத்து லாக் செய்து விடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. முதல் படமே ஹிட் அடித்த பின்னர், அந்த இயக்குநர் அடுத்த பிளாக்பஸ்டர் படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பல வருடங்களாக ஒரு சில இயக்குநர்கள் அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் அப்படியே ஆஃப் ஆகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது: இதற்கு பெயர் வளர்த்து விடுவது கிடையாது என்றும் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது என சம்பந்தப்பட்ட இயக்குநர்களே புலம்ப ஆரம்பித்துள்ளனர். அதில், குறிப்பாக ஒரு பிரபல இயக்குநர் 7 வருஷமாக ஷூட்டிங்கே போகாமல் பாதி ஆயுள் கைதியாகவே மாறிவிட்டதாக சினிமா பிரபலம் ஒருவரிடம் சமீபத்தில் புலம்பிய தகவல்கள் கசிந்து வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

டைரக்‌ஷனையே மறந்துட்டேன்: தன்னை நம்பி கூடவே இருந்த டைரக்‌ஷன் டீமுக்கும் காசு கூட தரமுடியாத சூழலில் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் என நம்பிக்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்களும் அடுத்தடுத்து புதிதாக வரும் இயக்குநர்களை தேடி ஓடிவிட்டனர் என்றும் நம்பி போன நடிகர் மாதம் மாதம் குறைந்த தொகையயே கை செலவுக்கு கொடுத்துக் கொண்டு, அடுத்து நம்ம படம் தான் என சொல்லிக் கொண்டே பல வருடங்களை கடத்தி விட்டார் என்றும் டைரக்‌ஷனையே கிட்டத்தட்ட மறந்துவிட்டது போல இருக்கு என்றும் அந்த பிரபலம் புலம்பித் தள்ளிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X