ரொமான்ஸுக்காக பீட்டர் டைரக்டருடன் இணைகிறாரா வெளிச்சம்?
Recommended Video

பீட்டர் இயக்குனர்.. கான் நடிகை.. நடக்குமா ?
வெளிச்ச நடிகரும் பீட்டர் விடும் இயக்குநரும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். போலீஸ் படத்தின் மூலம் நடிகருக்கு பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குநர். இருவரும் மூன்றாவதாக இணையவிருந்த படத்தின் கதையில் பிரச்னை ஏற்பட்டு பிரிந்ததும் எல்லோரும் அறிந்ததே...
இந்நிலையில் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்களாம். வரிசையாக ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் நடிகருக்கு ஃப்ரெஷாக ஒரு லவ் சப்ஜெக்டில் நடிக்க ஆசையாம். ரொமான்ஸை பொருத்தவரை இயக்குநர் தான் கிங் என்பதால் மீண்டும் இணைய முடிவெடுத்து பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதாம்.

நேற்று முன் தினம் இயக்குநர் இயக்கிய ஒரு பாடலை தான் வெளியிட்டு நட்பு துளிர்ப்பதை காட்டிக்கொண்டார் நடிகர்.
ஆக, ரொமான்ஸ் மூடுக்கு திரும்புது தமிழ் சினிமா?
Comments


Click it and Unblock the Notifications