»   »  தம்பியால் இயக்குநருக்குத் 'தடா' போட்ட 'பிரகாச' நடிகர்!

தம்பியால் இயக்குநருக்குத் 'தடா' போட்ட 'பிரகாச' நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காட்டின் ராஜாவை பெயராகக் கொண்ட படத்தை தம்பிக்காக பிரகாச நடிகர் தள்ளி வைத்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவை ஆளும் அண்ணன் தம்பிகளில் இவர்கள் இருவருக்கும் முக்கியமான இடமுண்டு. தற்போது அண்ணன் நடிகரைத் தொடர்ந்து தம்பி நடித்திருக்கும் பிரமாண்ட படத்தை முக்கியமான பண்டிகை நாளில் வெளியிடத் தீர்மானித்துள்ளனர்.

மிக அதிக பட்ஜெட், 3 ஹீரோயின்களுடன் உருவாகியிருக்கும் அப்படத்தை தம்பி நடிகர் ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். இந்நிலையில் அண்ணன் நடிகரின் படத்தையும் அதே நாளில் வெளியிட இயக்குநர் திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால் தம்பியின் படம் வெளியாவதை அறிந்த அண்ணன் தனது படத்தைத் தள்ளி வெளியிடுமாறு இயக்குநரிடம் கறாராகச் சொல்லி விட்டாராம்.

இதனால் வேறு வழியின்றி இயக்குநர் தன்னுடைய படத்தைத் தள்ளி வைத்திருப்பதாகக் கிசுகிசுக்கப்படுகிறது.

English summary
Sources said Sun Actor Postponed his Upcoming Movie Release date.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil