தாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்!
முந்தைய பட தோல்வியால் புதிய படத்தில் வாத்தியாராகி இருக்கிறார் சூப்பர் நடிகர்.
Recommended Video

சென்னை: தனது தாதா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் மனமுடைந்து போயுள்ள சூப்பர் நடிகர், அடுத்ததாக தான் நடித்து வரும் படத்தில் வாத்தியாராக நடிக்க உள்ளாராம்.
ஒருமுறைக்கு இருமுறை ஒரே இயக்குநருக்கு வாய்ப்பளித்தார் நடிகர். ஆனால், இரண்டு படங்களையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இயக்குநரோ, தான் சொல்ல வேண்டிய விசயத்தை மட்டும் நடிகரைப் பயன்படுத்தி மக்களுக்கு சொல்லிக் கொண்டார்.

இதனால் வழக்கமாக நடிகரின் படத்தில் இடம்பெறும் காமெடி உள்ளிட்ட இத்யாதிக்கள் மிஸ்ஸானது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ரசிகர்களைக் கொண்டவர் நடிகர். எனவே, படத்தைப் பார்த்த பலருக்கு, நடிகரின் தாதா வேடம் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.
இது வசூலிலும் எதிரொலித்தது. அதிக தியேட்டர்களில் ரிலீசான போதும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் பலத்த அடி வாங்கியது. எனவே, உடனடியாக மக்களைத் திருப்தி படுத்தும் வகையில் படம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நடிகர் இருக்கிறார்.
இதனால் தான் தற்போது நடித்து வரும் படத்தில், வாத்தியாராக அரிதாரம் பூசி இருக்கிறார் நடிகர். கூடவே, செண்டிமெண்டிற்காக இப்படத்தில் தனது அறிமுக பாடலையும் ராசியான பாடகரை வைத்து பாட வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











