»   »  சும்மா இருந்த உச்சம், கோட், லீடர் நடிகர்களின் ரசிகர்களை கடுப்பேற்றிய நடிகை

சும்மா இருந்த உச்சம், கோட், லீடர் நடிகர்களின் ரசிகர்களை கடுப்பேற்றிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று அழுகாச்சி நடிகரை சூப்பர் ஸ்டார் என்று கூறி சமத்து நடிகை உச்ச நடிகரின் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் என்றால் அது எங்க தலைவர் தான் என உச்ச நடிகரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் ஆளு தான் என கோட் நடிகர் மற்றும் லீடர் நடிகரின் ரசிகர்கள் வேறு கூறி வருகிறார்கள்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கூறி அவ்வப்போது இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமத்து நடிகை அழுகாச்சி நடிகரை பார்த்து சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டார்.

யாராவது ஊன்னு சொன்னாலே அழுதுவிடுகிறார் அவர் சூப்பர் ஸ்டாரா என்று உச்ச நடிகரின் ரசிகர்கள் கொதித்துவிட்டனர். எங்க ஆளுங்க இருக்கும்போது அழுகாச்சி அடுத்த சூப்பர் ஸ்டாரா என கோட் மற்றும் லீடர் நடிகரின் ரசிகர்கள் ஒரு பக்கம் முணுமுணுக்கிறார்கள்.

நடிகையால் சூப்பர் ஸ்டார் தலைப்பு பிரச்சனை மறுபடியும் தலை தூக்கியுள்ளது.

English summary
A young actress said that TV hero is a superstar at a function held in Hyderabad. Real superstar's fans are not happy about her comment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil