ஓரினச்சேர்க்கையில் ஓவர் நாட்டம்.. அந்த நடிகை கணவரை பிரிய காரணமே அதுதானாம்?.. பர்சனல் மேட்டர்!

By Staff

ஹைதராபாத்: சினிமாவில் துணை நடிகையாக இருந்து வரும் அந்த பிரபலம் சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்து பிரிய காரணமே தனது தோழியுடன் ஏற்பட்ட தகாத உறவு தான் என பகீரை கிளப்புகின்றனர். பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாகவே அந்த நடிகை திருமணம் செய்துக் கொண்டார் என்றும் அவருக்கு பல வருடமாக இப்படியொரு ரகசிய காதல் இருப்பது தெரிய வந்த நிலையில் தான் பிரச்சனை வெடித்தது என்கின்றனர்.

கலப்புத் திருமணம் செய்யவே பல சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பாலின வேறுபாடுகளை எல்லாம் கடந்து ஓரினச்சேர்க்கை திருமணங்கள் சமீப காலமாக சகஜமாகி வருகின்றன. ஆனால், அதில் சில சிக்கல்களும் ஆங்காங்கே நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

gossip kollywood actress gossip

ஆரம்பத்திலேயே ஓரினச்சேர்க்கை திருமணம் செய்துக் கொள்ளாமல், விருப்பத்திற்கு மாறாக சில கட்டாயத்தின் பேரில் வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்வ்தும் ஒரு கட்டத்திற்கு மேலே சண்டை வெடித்ததும் விவாகரத்து செய்து பிரிந்து தனது இணையுடன் சேர்வதாகவும் சிலர் செய்வதால் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்கின்றனர்.

துணை நடிகை விவாகரத்து: ஒரு சில படங்களில் சைடு ரோலில் நடித்தாலும் அந்த நடிகை ரசிகர்கள் மத்தியில் பாப்புலரானவர் தான் என்கின்றனர். தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்த சந்தோஷத்தை ஸ்டேட் விட்டு ஸ்டேட் தனது காதலியுடன் சென்று கொண்டாடி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. நடிகைக்கு யாருடனோ ஒரு நபர் மீது கள்ளத் தொடர்பு இருப்பதாகவே நினைத்துக் கொண்டு விவாகரத்து வரை சென்ற கணவருக்கு விவாகரத்துக்குப் பிறகு தான் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்கிற விஷயமே தெரிய வந்தது என்கிற திடுக்கிடும் தகவல்கள் காத்து வாக்கில் கசிந்துள்ளன.

ஓரினச்சேர்க்கையில் ஓவர் நாட்டம்: திருமணத்தின் போதே உங்களை எனக்கு பிடிக்கவில்லை என்றும் ஆண்களையே எனக்கு பிடிக்காது என்றும் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அந்த நடிகை தெளிவாக சொல்லியிருந்தால் தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கை பாதிக்காது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சொந்த ஊரில் தனது தோழியுடன் சேர்ந்திருப்பது தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்பதால் வேறு மாநிலத்துக்கு சென்று ஆட்டம் போட்டு வருகிறாராம்.

ஜீவனாம்சம்: இதில் வேடிக்கை என்னவென்றால் தனது கணவர் மீது ஜீவனாம்சம் கேட்டும் அந்த நடிகை வழக்கு போட்டிருக்கிறார் என்கின்றனர். இவருடைய பணத்தை வாங்கிக்கொண்டு அந்த நடிகை தனது காதலியுடன் ஜாலியாக இருக்க எப்படியெல்லாம் பிளான் செய்திருக்கிறார் பாருங்க என விவரம் அறிந்தவர்கள் நடிகையை திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X