அந்த மாதிரி ரோல் மட்டுமே கொடுக்குறாங்க.. ஷூட்டிங்கில் ஒரு மாதிரி பார்க்குறாங்க.. புலம்பும் நடிகை!
சென்னை: கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் அந்த துணை நடிகைக்கு தொடர்ந்து மோசமான கதாபாத்திரங்களும் படுக்கையறை காட்சிகளுமே கொடுக்கப்பட்டு வருவதாக புலம்பித் தள்ளி உள்ளாராம்.
கவர்ச்சியான உடலமைப்பைக் கொண்டு சினிமாவில் நடிக்க வந்த துணை நடிகைக்கு பட வாய்ப்புகள் என்பது எப்போதாவது தான் கிடைக்கிறது.
ஆனால், அதிலும், நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தனது தோழியிடம் தனது குறைகளை கூறிய தகவல் அப்படியே கோடம்பாக்கத்தில் தற்போது காத்துவாக்குல கசிந்து வருகிறது.

கவர்ச்சி நடிகை
முத்தின கத்தரிக்காய் மாதிரி இருந்தாலும், கவர்ச்சியான தனது தோற்றத்தால் சினிமாவில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் அந்த துணை நடிகை நடித்து வருகிறார். கெளரவமான கவர்ச்சி கதாபாத்திரங்கள் கொடுத்தால் கூட நடித்து விடலாம் என நினைத்த அவருக்கு ரொம்பவே அருவருப்பான கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்து வருகிறதாம்.

அந்த மாதிரி ரோலுக்கு மட்டுமே
கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு பதிலாக படுக்கையறை காட்சிகளில் நடிக்கவும், சின்ன வீடு, செட்டப் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே தன்னை இயக்குநர்கள் அழைப்பதாகவும், அந்த மாதிரியான ரோல் கதையில் இருந்தால் தான் எனக்கு வாய்ப்புகளே வருகிறது என்றும் தனது தோழியிடம் சமீபத்தில் அந்த துணை நடிகை புலம்பித் தள்ளி உள்ளார்.

மோசமாக பார்க்குறாங்க
ஷூட்டிங்கில் அரைகுறை ஆடைகளுடனும், சேலையை சரியவிட்டும் நடிக்கும் காட்சிகளே எனக்கு கிடைப்பதால், செட்டுக்குள் வந்த உடனே அங்கே உள்ள பலரும் தன்னை ஒரு மாதிரியாக பார்க்குறாங்க என்றும் அதனால், அதிகமாக படங்களை கமிட் செய்வதில்லை என்றும் நம்பகத்தன்மையான பெரிய படங்களுக்கு மட்டுமே ஓகே சொல்வதாக கூறியுள்ளார்.

வாய்ப்பையும் விட முடியல
எப்போதாவது கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளையும் இந்த காரணத்திற்காக விட முடியாத நிலையும் உள்ளதால் தான் அப்படி நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறேன் என்றும், எனக்கான சரியான கதாபாத்திரம் சீக்கிரமே கிடைக்கும் என்றும் பெருமூச்சு விட்டபடி தனது தோழிக்கு சமீபத்தில் நடித்த அந்த கதாபாத்திரம் குறித்து விளக்கினார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சின்னத்திரை பக்கமே
வெள்ளித்திரையில் தனது பெயர் ரொம்பவே டேமேஜ் ஆன நிலையில், சின்னத்திரை பக்கமே ஒதுங்கி விட்டதாகவும், சின்னத்திரையில் அந்த மாதிரியான காட்சிகள் இல்லாத நிலையில், இங்கே நடிப்பதில் எந்தவொரு சிக்கலும் இல்லாததால், இங்கே தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அவர் மனக் கஷ்டத்துடன் புலம்பியது வெளியே கசிந்த நிலையில், கோடம்பாக்கத்தில் இந்த விவகாரம் ஒரு சின்ன சலசலப்பை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











