»   »  சுஷ்மிதாவின் 4வது காதல் முறிவு

சுஷ்மிதாவின் 4வது காதல் முறிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுஷ்மிதா சென் தனது நான்காவது காதலரையும் பிரிந்து விட்டாராம்.

ஐஸ்வர்யாவுக்கு முன்பு உலக அழகியானவர் சுஷ்மிதா. அழகிப் பட்டம் வென்ற பிறகு சினிமாவுக்குள்நுழைந்தார். ரட்சகன் படம் மூலம் நடிகையாக மாறிய சுஷ்மிதா அந்தப் படத்திற்குப் பிறகு இந்தியில்பிரபலமானார். இடையே முதல்வனில் ஒத்தப் பாட்டுக்கு வந்து ரசிகர்களுக்கு ஒத்தடம் கொடுத்து விட்டுப்போனார்.

ஆனால் பின்னர் வந்த ஐஸ்வர்யா ராய் அலையில் சிக்கி ஓரம் தள்ளப்பட்டார். இருந்தாலும் சுஷ்மிதாவுக்கென்றுஇருந்த சில வாய்ப்புகள் வரத்தான் செய்தன. அவரும் கிளாமரும், கில்மாவுமாக திறமை காட்டிக்கொண்டுதான்இருக்கிறார்.

இடையே அவருக்கும் இயக்குனர் விக்ரம் பட்டுக்கும் இடையே காதல் புகுந்தது. மிக நெருக்கமாக சுற்றி வந்தனர்.திடீரென அந்தக் காதல் புட்டுக் கொண்டது.

இதையடுத்து பிரபல ஹோட்டல் செயின் அதிபரான சஞ்சய் நரங்குக்கும் சுஷ்சுக்கும் இடையே காதல் வந்தது.அதுவும் கொஞ்ச நாள் ஓடி பிரேக் டவுன் ஆகிவிட்டது.

அடுத்ததாக ரந்தீப் ஹூடா என்ற நாலாந்தர நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்தார் சுஷ். ஆனால், அந்தக்காதலில் செம அடி. சில மாதங்கள் கூட இந்தக் காதல் ஓடவில்லை.

இந் நிலையில் தான் சுஷ்ஷுக்கும், விளம்பரப் பட இயக்குநர் மானவ் மேனன் என்ற கேரள ஆசாமிக்கும் காதல்பூத்தது. இத்தனைக்கும் மானவ் ஏற்கனவே மணமானவர். ஆனாலும் சுஷ்ஷை வளைத்துப் போட்டார் மேனன்.சுஷ்ஷும் அவரும் ஜில்பான்ஸாக இருந்து வந்தார்.

கணவரின் காதல் (கள்ளக்காதல்?) குறித்து தெரிய வந்து அப்செட் ஆன மானவின் மனைவி கோபித்துக் கொண்டுபுதுவையில் உள்ள தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார். இது ரொம்ப வசதியாகப் போய்விடவே மானவ்,சுஷ்மிதா இடையிலான நெருக்கம் இன்னும் அதிகமானது.

இப்படி இருவரும் இணை பிரியாமல் இருந்து வந்த நிலையில் முன்னாள் காதலரான ரந்தீப் ஹூடாவுக்கும்,சுஷ்மிதாவுக்கும் இடையே பழைய நட்பு மீண்டும் முகிழ்த்தது. சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற சுஷ்ஷுடன்,ஹூடாவும் உடன் சென்றார்.

இது மானவ் மனதில் கடுப்பை ஏற்படுத்தியது. இதனால் இப்போது சுஷ்மிதாவுடன் பேசுவது, பார்ப்பது இத்யாதி,இத்யாதி மேட்டர்களை நிறுத்தி விட்டாராம் மானவ்.

மானவும், சுஷ்ஷும் பிரிந்து விட்டார்கள், இனிமேல் சேர மாட்டார்கள் என பாலிவுட்டில் செய்தி கசிந்து வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான இம்ரான்கானுக்கும், சுஷ்மிதாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளதாக கூட ஒரு செய்தி பாலிவுட்டில் பரபரப்பாகபேசப்படுகிறது.

சரியான, ஜில்லாலங்கடி ஆளா இருப்பாரு போலிருக்கே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil