»   »  வில்லங்க சுவாதி!

வில்லங்க சுவாதி!

Subscribe to Oneindia Tamil

சுவாதி, சுத்த வில்லங்கப் பொண்ணாக இருப்பார் போலிருக்கு. தன்னை அணுகுகிறவர்களிடம் ஏடாகூடாமான,வில்லங்கமான கேரக்டரோடு வாங்க, எதிர்பார்க்கும் கிளாமரை விட எக்குத்தப்பாக கொடுத்து தூள் கிளப்பிவிடுகிறேன் என்று கூறில் புளகாங்கிதமடைய வைக்கிறாராம்.

ஒரு காலத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுவாதி. அந்தக் கால விஜய் படங்களில் ஒரு ரவுண்டு வந்தார்.பிறகு அஜீத்தோடு அட்டாச் ஆனார். இப்படியே சின்னதாக ரவுண்டு வந்து கொண்டிருந்த சுவாதிக்கு பெரியஆப்பு வைப்பது போல ஏகப்பட்ட கிளாமர் நாயகிகள் வந்து சுவாதியை மூக்கு சிந்த வைத்து விட்டனர்.

ஹீரோயின் வாய்ப்புக்காக காத்துப் பார்த்த சுவாதி பிறகு குத்தாட்டம், குதியாட்டத்திலும் இறங்கிப் பார்த்தார்.ஒன்றும் சுகப்படவில்லை. இடையில் கொஞ்சம் போல கேப் விட்டிருந்த சுவாதி தற்போது மீண்டும் முழு வீச்சில்ஹீரோயின் வேட்டையில் இறங்கியுள்ளார்.

இடையில் ஏறிப் போயிருந்த உடம்பை அரும்பாடு பட்டு குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். முகம் மட்டும் முத்தலாகஇருக்கிறதாம். அதையும் பல அடுக்கு பாலிஷ் போட்டு மெருகேற்றியுள்ளாராம்.

புதிய புகைப்பட ஆல்பம் ஒன்றையும் தயாரித்து தயாரிப்பாளர்கள் மத்தியில் தட்டி விட்டுள்ளாராம்.இதுபோதாதென்று சினிமா விழாக்களிலும் அடிக்கடி தலை, உடல் காட்டி கலக்குகிறார். அவர் போட்டு வரும்காஸ்ட்யூம் எல்லாம் முக்காலும், அரைக்காலுமாக இருப்பதால் கண்களுக்கு நல்ல விருந்தாக இருக்கிறதாம்.

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் சுவாதியை அணுகி திறமை காட்டக் கோரியுள்ளார். அடடா, சூப்பரப்பு என்றுசந்தோஷமான சுவாதி நான் தானே ஹீரோயின் என்று கேட்க, அவரோ, இல்லை ஹீரோவா அண்ணியாகநடிக்கணும் என்று கூறியுள்ளார்.

வந்த கடுப்பை வாய்க்குள்ளேயே போட்டு மென்று விட்டு, அந்தத் தயாரிப்பாளரிடம் படு பாந்தமாக பேசி,இப்படிப்பட்ட ரோல்களுக்கு நான் விடை கொடுத்து விட்டேன். உயிர் படத்தில் சங்கீதா நடித்தது போலஏடாகூடமான கேரக்டருடன் வாங்க, அசத்தக் காத்திருக்கிறேன். சம்பளம் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்கஎன்று அன்பாக கூறி அனுப்பி வைத்தாராம்.

இதேபோலத்தான் தனது பி.ஆர்.ஓ மூலமாகவும் தயாரிப்பாளர்களுக்கு மெசேஜ் தந்து வருகிறாராம்.

ஏடாகூடமாக இறங்கி விட்டார் சுவாதி, அருந்ததி மாதிரி அசத்துவாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil