'அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகே.. நல்ல வாய்ப்பு, சம்பளம் தர ரெடியா?'
ஸ்வீட் நடிகைக்கு சமீபகாலமாக வாய்ப்புகளே இல்லை. எனவே தனது கொள்கைகளை தளர்த்தி சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய தயாராகி விட்டாராம்.
இதுவரை இழுத்துப் போர்த்தி குடும்பப் பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தார் நடிகை. இடையில் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சற்று கவர்ச்சியாக நடித்தார்.
இனி தமிழை மட்டுமே நம்பியிருந்தால் பிரயோஜனமில்லை என தெலுங்குப் பக்கமும் கவனம் செலுத்துகிறாராம்.
அக்கட தேசத்துக்கு கவர்ச்சி தூக்கலாக வேண்டும் என்பதற்காக தனது குடும்பப்பாங்கு கொள்கையை அட்ஜஸ்ட் செய்துகொண்டு செம கிளாமர் ஃபோட்டோ ஷூட் எடுத்து விட்டிருக்கிறாராம். தலைமுடியையும் கலரிங் செய்திருக்கிறாராம்.
நல்ல வாய்ப்பு, பெரிய சம்பளம் இருந்தால் எந்த லெவலுக்கும் இறங்க தயார் என வலுவாக சிக்னமும் கொடுத்துவிட்டாராம்.
அம்மணியின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம்!


Click it and Unblock the Notifications











