எதுக்கு அப்படி நடிக்கணும்.. இப்போ ஹீரோயின் சான்ஸ்க்காக இப்படி கவர்ச்சி காட்டிட்டு திரியணும்!
சென்னை: கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டில் கால் பதித்த அந்த திறமையான நடிகை, சமீபகாலமாக சிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனால், கோலிவுட்டில் முன்பு போல நாயகி ரோல் கிடைக்காமல் தொடர்ந்து அவருக்கு அது போன்ற கதாபாத்திரங்களே கிடைத்து வருகிறதாம்.
இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிய அந்த நடிகை தற்போது கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறாராம்.

திறமையான நடிகை
தனது திறமையான நடிப்பால் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் அந்த திறமையான நடிகை. நாயகியாக மட்டுமின்றி, அம்மா, மகள், தங்கை என எந்த ரோல் கொடுத்தாலும், கதாபாத்திரம் பிடித்திருந்தால் உடனடியாக ஓகே சொல்லி நடிப்பில் வெளுத்து வாங்கி வந்தார்.

சைடு ரோல்
கதையில் முக்கியமான ரோல் என்றும் நீங்க நடிச்சாத்தான் சரியாக வரும் என்றும் கூறி அவருக்கு சைடு ரோல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இது தெரியாமல், நல்ல கதாபாத்திரம் என்பதால், அவரும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து வந்தார்.

கை விட்டாச்சு
ஆனால், அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்த பிறகு நாயகியாக உங்களை யாரும் இப்போ பார்க்க விரும்புறதில்லை. இனிமே அதே போன்ற கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறீங்களா என்று தற்போது சினிமா வட்டாரங்கள் அவரை துணை நடிகையாகவே மாற்ற முயற்சி செய்து வருகிறார்களாம். இதனால் அந்த நடிகை கடும் அப்செட் ஆகியுள்ளார்.

புது ரூட்
இதனால், மீண்டும் நாயகி அந்தஸ்த்து பெற வேண்டும் என்றால், தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்தால் தான் கிடைக்கும் என அந்த நடிகைக்கு தவறான வழி காட்டுதல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளது. அதையும் நம்பி ஏமாந்த அந்த நடிகை செம்ம செக்ஸியான போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

சான்ஸ் கிடைக்குமா?
மீண்டும் தமிழில் தான் விட்ட இடத்தை அந்த நடிகை பிடிப்பாரா? என்றும் அவருக்கு பெரிய நடிகர்களுடன் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்றும் கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. மேலும், அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதற்கு பதிலாக ட்ரோல்கள் தான் அதிகமாக குவிந்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











