பிரைட் நடிகருக்கு சுத்தமா இல்லை.. ஆனால், மாஸ் நடிகருக்கு எதிரா ஒல்லி நடிகருக்குத்தான் அந்த ஆசையாம்?
சென்னை: பல ஆண்டுகள் கழித்து பக்காவாக கமர்ஷியல் பிளஸ் கடவுளை வைத்து பிரைட் நடிகர் கல்லா கட்டிய நிலையில், இவரை எப்படியாவது மாஸ் நடிகருக்கு எதிராக அரசியல் களத்துக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என எதிர்தரப்பு போட்ட திட்டம் தான் சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது என்று கூறுகின்றனர்.
ஆனால், அடுத்தடுத்து பல படங்கள் கைவசம் வைத்துள்ள பிரைட் நடிகர் எப்படியாவது நம்பர் ஒன் இடத்தை நாம் தான் தக்க வைக்க வேண்டும் என கடுமையாக உழைத்து வருவதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கும் பஞ்சாயத்துக்களுக்கும் இடமே கொடுக்கக் கூடாது என அதிரடியாக மறுத்து விட்டார்.

இதற்கிடையே, சைலண்ட்டாக ஒல்லி நடிகர் மட்டுமே ஒரு வேலையை பார்த்து வருகிறார் என்றும் அவருக்குள்ளும் மனதில் அந்த பெரிய ஆசை உள்ளது என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சினிமாவை தாண்டி: நம்ம ஊரில் சினிமா பிரபலங்களை தான் மீடியாக்கள் பெரிதாக பூதக்கண்ணாடி வைத்துக் காட்டி வருகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. ஒரு அறிவியல் வல்லுநரையோ, தொழிலதிபரையோ, மற்ற துறையில் சாதிக்கும் நபர்களையோ மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரிதுப்படுத்திக் காட்டுவதே இல்லை என்றும் அதன் காரணமாகவே தொடர்ந்து சினிமாவில் இருந்து மட்டும் பிரபலங்கள் அரசியலுக்கு அதிகளவில் வருவதாகவும் கூறுகின்றனர்.
உஷாரான பிரைட் நடிகர்: ஏற்கனவே மாஸ் நடிகருக்கு எதிராக டாப் நடிகரை கொம்பு சீவி விட பார்த்த நிலையில், தலைமேல் ஒன்று போடாத குறையாக கம்பி நீட்டி விருட்டென கிளம்பி விட்டார் டாப் நடிகர். அதன் பின்னர், சமீபத்தில் நம்பர் ஒன் இடத்தை இந்த ஆண்டு பிடித்துள்ள பிரைட் நடிகரை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து நடிகருக்கு எதிராக காய் நகர்த்த வேண்டும் என எதிர் தரப்பினர் பார்த்த வேலைக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற வேலையே வேண்டாம் என நடிகர் ரொம்பவே உஷாராகி சினிமாவில் தனது சிம்மாசனத்தை வலுவாக்க முயற்சித்து வருகிறார்.
ஒல்லி நடிகருக்குத்தான் அந்த ஆசை: பிரைட் நடிகருக்கு அந்த பெரிய ஆசை இல்லை என்று கூறப்படும் நிலையில், தமாஸ் நடிகர் மற்றும் ஒல்லி நடிகர் இருவரில் ஒருவருக்கு கண்டிப்பாக அந்த ஆசை இருக்கும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதிலும், ஒல்லி நடிகரை வலுக்கட்டாயமாக உள்ளே கொண்டு வர அவரை சுற்றியிருக்கும் சிலர் மும்முரம் காட்டி வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. நடிகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது விரைவில் தெரியவரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications