நடிகரை நடிக்கவே போக விடாமல் டார்ச்சர் செய்யும் ரகசிய சிநேகிதி.. வசமா சிக்கிட்டாரே!

By Staff

சென்னை: அந்த பிரபல நடிகர் நடித்தாலே படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அந்தளவுக்கு கிரேஸை உண்டாக்கும். குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு தனி இடமே உள்ளது. ஆனால், கடந்த சில வருடங்களாக பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருப்பதால் அவரது ரசிகர்களே நடிகரை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டத் தொடங்கி விட்டனர்.

குடும்பத்திலும் நடிகருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ரொம்பவே அடம்பிடித்து வந்தாலும், சிறிது காலம் ரகசிய சிநேகிதியுடன் பழகி பார்த்து விட்டு திருமணம் பண்ணலாமா? வேண்டாமா? என்கிற முடிவுக்கு வருகிறேன். அதுவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

Talented Actor avoids movies due to his secret lover orders
Photo Credit:

எப்படியாவது ரசிகர்களுக்காக தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என நடிகர் நினைத்தாலும், அதை தடுப்பதே அவரது ரகசிய சிநேகிதி தான் என்கிற ஹாட் கிசுகிசு ஒன்று தற்போது சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

கிலோ கணக்கில் டேலண்ட்: நடிக்கத் தெரியாத நடிகர்கள் எல்லாம் நான் தான் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் நாயகன் என நச்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில், நன்றாக நடிக்கத் தெரிந்தும் கிலோ கணக்கில் டேலண்ட் இருந்தும் அதை விட டன் கணக்கில் இருக்கும் கொழுப்புக் காரணமாக பெரிதாக நடிப்பதில் கவனம் செலுத்தாமல் அந்த நடிகர் இருந்து வருகிறார் என அவரது ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.

ரகசிய சிநேகிதி தான் காரணம்: எப்படியாவது தொடர்ந்து படங்களில் நடித்து பழைய சிம்மாசனத்தை பிடித்து விடுவார் என ரசிகர்கள் காத்திருந்தாலும், அதெல்லாம் எனக்கு வேண்டாம் என ரகசிய சிநேகிதியுடன் ரொமான்ஸ் செய்வதிலேயே அதிக காலத்தை வீணடித்து வருகிறார் என்றும் அவரை தொடர்ந்து நடிக்க விடாமல் பில்டப் கொடுத்து கெடுப்பதே அவரது ரகசிய சிநேகிதி தான் என கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.

கடுப்பில் மேனேஜர்: நடிகரின் மேனேஜர் தான் இந்த விஷயத்தில் ரொம்பவே கடுப்பில் இருக்கிறாராம். ஒரு பக்கம் பெற்றோருக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல். இன்னொரு பக்கம் தயாரிப்பாளருக்கும் இயக்குநர்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறாராம். ரசிகர்கள் கண்ணில் சிக்கிவிட்டால் அவரது நிலைமையே படுமோசமாக மாறிவிடுகிறது என்கின்றனர். நடிகர் சீக்கிரமே ரகசிய சிநேகிதியை திருமணம் செய்துக் கொண்டால் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X