ரொம்பவே டார்ச்சர் பண்ண இயக்குநர்.. இனிமே அந்த பக்கமே போக மாட்டேன் என அடம்பிடிக்கும் வம்பு நடிகர்?

By Staff

சென்னை: வம்பு நடிகருக்கு ஒரு பெரிய ஹிட் கொடுத்த அந்த இங்கிலீஷ் இயக்குநர் இயக்கத்தில் மீண்டும் இணைந்த படங்கள் எல்லாம் சுமார் ரகங்களாகவே மாறின.

அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகருக்கு பிரச்சனை என பூதம் கிளம்பிய நிலையில், தயாரிப்பு தரப்புக்கும் நடிகருக்கும் பிரச்சனையே இல்லையாம். இதற்கு முழு காரணமும் அந்த இயக்குநர் பண்ண அப்படியொரு வேலை தான் என்கின்றனர்.

இனிமேல், அந்த இயக்குநருடன் இணைந்து பணியாற்ற போவதே இல்லை என்கிற முடிவுக்கே வம்பு நடிகர் வந்து விட்டார் என்கின்றனர்.

தயாரிப்பாளர் பஞ்சாயத்து: வம்பு நடிகர் அந்த தயாரிப்பாளருக்கு சில படங்கள் பண்ணுவதாக ஒப்புக் கொண்டு விட்டு அதன் பின்னர், ஒரே படத்தில் ஓட்டம் பிடித்த நிலையில், தயாரிப்பாளர் பஞ்சாயத்துக்கு சென்று விட்டார்.

இந்த விவகாரம் நடிகரின் காதுக்கு எட்டியதும், தயாரிப்பாளருக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு படம் பண்றதுல பிரச்சனையே இல்லை. ஆனால், இயக்குநர் அவர் வேண்டாம் எனக் கூறி விட்டாராம்.

இயக்குநருடன் தான் சண்டை: வம்பு நடிகரின் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த அந்த இங்கிலீஷ் இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே முட்டிக் கொண்ட ஈகோ மோதல் தான் காரணம் என ஷாக் தகவல்கள் கோடம்பாக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

சமீபத்தில் வம்பு நடிகரின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட அவரை அழைக்காமல் விட்டதும், நாயகி மட்டுமே அந்த இயக்குநரை பாராட்டி பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட நிகழ்வுகள் அரங்கேறவும் இதுதான் காரணம் என்கின்றனர்.

அப்படி என்ன பிரச்சனை: எவ்வளவு வேண்டுமானால் தான் கஷ்டப்பட்டு நடிக்கத் தயார் என்றும் அந்த இயக்குநரிடம் பதிலுக்கு ஹிட் படமாக இந்த படம் அமைய வேண்டும் என்று மட்டுமே வம்பு நடிகர் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்ததாம்.

ஆனால், வம்பு நடிகரை வாட்டி வதைத்து இஷ்டத்துக்கு படத்தை எடுத்த அந்த இயக்குநர் மரியாதை குறைவாக எல்லாம் நடத்தியதையும் பொருட்படுத்தாமல் நடிகர் சகித்துக் கொண்டு இந்த முறை தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய படத்தைக் கொடுக்கப் போகிறேன் என நம்பிக் கொண்டிருந்த நிலையில், ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த நடிகரே டென்ஷன் ஆகி விட்டாராம்.

Talented actor avoids that director due to this ego clash

மேலும், படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தது போலவே சொதப்பிய நிலையில், இனிமேல் இந்த இயக்குநருடன் படம் பண்ணுவதில்லை என்கிற முடிவுக்கு வந்தது மட்டுமின்றி அந்த இயக்குநருடன் பெரிய சண்டையே போட்டு விட்டார் என ஷாக் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X