எவ்ளோ ட்ரை பண்ணாலும் ஹிட்டு கிடைக்க மாட்டுதே.. துபாயில் கதறியழுத வம்பு நடிகர்.. ரொம்ப பாவம்!

By Staff

சென்னை: கம்பேக் கொடுத்து விடுவேன், என் ரசிகர்களுக்காக இனிமேல் வேறலெவலில் அவதாரம் எடுக்கப் போகிறேன் என ஆத்மார்த்தமாக சொல்லி பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்த வம்பு நடிகருக்கு மறுபடியும் மறக்க முடியாத அடி கிடைத்த நிலையில், இந்த ஆண்டு வீணாகப் போய்விட்டதே என புலம்பி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

ஏற்கனவே அந்த பாஸ் நடிகரை நம்பித்தான் அந்த வரலாறு பட இயக்குநருடன் கைகோர்த்தார் வம்பு நடிகர். ஆனால், பட்ஜெட் எகிறுவதை பார்த்து நண்பரை போல பாஸ் நடிகரும் நைசாக கழண்டுக் கொள்ள நல்ல மனம் படைத்த வம்பு நடிகர் தானே அந்த சுமையையும் தலையில் தாங்குகிறேன் என தேவையில்லாமல் மாட்டிக் கொண்டராம்.

Talented Actor felt bad and cried at dubai for again facing flops

மேலும், இன்னொரு தயாரிப்பாளரை நம்பி ஒரு படத்தில் தலையை கொடுத்த நிலையில், அந்த தயாரிப்பாளரே தலைமறைவாக அந்த படமும் டிராப் ஆகும் சூழல் உருவாகி விட்டதால், ரொம்பவே மனம் உடைந்து போய்விட்டார் என்கின்றனர்.

கைவிட்ட காதலிகள்: சிறு வயதில் இருந்தே சினிமா தான் உயிர் என வாழ்ந்து வந்தாலும், நடிகருக்கு கொஞ்சம் பார்ட்டி பழக்கமும் காதலிக்கும் குணமும் அதிகமாகவே சினிமாவை தாண்டி அவரை கெடுக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் சில பெரிய நடிகைகளுடன் அத்துமீறிய காதல் உறவிலும் மயக்கத்திலும் தேவையில்லாமல் நேரத்தை வீணடித்து சினிமாவில் ஷைன் ஆக வேண்டிய காலக்கட்டத்தில் தடம் மாறி போன நிலையில், நடிகருக்கு பிறகு வந்த சிறுவர்கள் எல்லாம் பெரிய நடிகர்களாக மாறிவிட்டனர். நடிகரின் சில பழக்க வழக்கத்தால் அவரை காதலித்த காதலிகளும் கழட்டிவிட்டு வேறு நபர்களை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர்.

மனதில் வலியுடன் போராடும் வம்பு நடிகர்: தன்னுடைய ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் எளிதில் தட்டிப் பறித்துக் கொண்டு செல்வதை பார்த்து நடிகருக்கு மனதில் ஏகப்பட்ட வலியும் வேதனையும் நிறையவே உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன. அதையெல்லாம் கடந்து இன்னமும் தனக்காக இருக்கும் ரசிகர்களுக்காக படம் பண்ண வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்காக கம்பேக் கொடுக்கவும் போராடி வரும் நடிகருக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வருவதால் துபாய்க்குச் சென்று தனது நண்பர் வீட்டில் கதறி அழுது புலம்பியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஏமாற்றிய பாஸ் நடிகர்: மொத்தமாகவே பாஸ் நடிகரை மட்டுமே நம்பி சரண்டர் ஆகிவிட்டாராம் வம்பு நடிகர். அவர் நடித்த பல காட்சிகளை கடைசி நேரத்தில் தேவையில்லாமல் கத்தரித்து விட்டனர் என்றும் திரையில் மொத்த படமாக பார்க்கும் போது, வம்பு நடிகருக்கே ரொம்பவே ஷாக்காகி விட்டதாம். உழைத்த உழைப்பெல்லாம் வீணாக போய்விட்டதே என வெதும்ப ஆரம்பித்த நடிகர், அடுத்ததாக நல்ல இயக்குநர்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கப் போவதாக முடிவு எடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

ரொம்ப பாவம்: பழைய வம்பு நடிகராக இல்லாமல் பலரும் நம்பும் நடிகராக மாறிவிட்ட நிலையிலும், அடுத்தடுத்து நடிகருக்கு அதிர்ஷ்டம் கிடைக்காமல், தோல்வியே கிடைத்து வருவதால் மனமுடைந்து போயுள்ளார் என்கின்றனர். அடுத்து அவர் நடிப்பில் உருவாகவுள்ள படமும் அடுத்த ஆண்டு வெளியாகுமா? அல்லது மேலும், கால தாமதம் ஆகுமா என்று தெரியவில்லை என நடிகரை அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்களே பாவமாக பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X