குட்டி வாரிசு மீது காண்டான ஒல்லி நடிகர்.. தமாஸ் நடிகருக்கு மட்டும் என்ன இப்படியொரு ஜால்ரா?

By Staff

சென்னை: தயாரிப்பாளர் தயங்கிய நிலையிலும், குட்டி வாரிசு தான் போடுங்க பார்த்துக்கலாம் என தமாஸ் நடிகரை தூக்கி நிறுத்த இப்படியொரு வேலையை பார்த்தார் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்ததும், ஒல்லி நடிகர் காதுகளுக்கு அது செல்ல ரொம்பவே கடுப்பாகிவிட்டாராம்.

ஏற்கனவே ஒல்லி நடிகர் ரகசியமாக பார்க்கும் பல வேலைகள் அம்பலமாகி வருவதற்கு காரணமே அந்த தமாஸ் நடிகரின் ஐடி விங் தான் என்கிற பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் தன்னை விட தமாஸ் நடிகர் மிஞ்சிவிட்டாரே என டென்ஷன் ஆகிவிட்டார் என்கின்றனர்.

Talented Actor upset over Young Hero gets a fake blockbuster poster

ஆரம்பத்தில் இருந்தே ஒல்லி நடிகருக்கு பெரிய குடைச்சலாக வளர்த்துவிட்டவரே மாறுவார் என அவர் சொப்பனத்திலும் கண்டதில்லை என புலம்பி வரும் நிலையில், தற்போது ஒரே ஒரு போஸ்டர் ஒல்லி நடிகரை உரசி பார்த்து விட்டதாக கூறுகின்றனர்.

மாஸ் நடிகருக்கு எதிராக: தங்களுக்கு எதிராக போட்டா போட்டி போட துணிந்த மாஸ் நடிகர் எல்லை மீறி பேச ஆரம்பித்த நிலையில், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவரது பிசினஸை மொத்தமாக படுக்க வைக்க வேண்டும் என்பதற்காக தமாஸ் நடிகரை அவருக்கு எதிராக சண்டை சேவலாக களமிறக்க, அந்த சண்டை சேவல் ஒரே குத்துல மண்ணைக் கவ்வும் என நினைத்துக் கூட பார்க்காத நிலையில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என டேமேஜ் கன்ட்ரோல் பார்த்து வருகின்றனர் என கிசுகிசுக்கள் கிளம்பின.

காண்டான ஒல்லி நடிகர்: ஆனால், கொஞ்சம் எதிர்பார்க்காமல் அந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்கனவே படம் பண்ணி பல்பு வாங்கிய ஒல்லி நடிகர் என்னோட படத்துக்கு மட்டும் இப்படி போலி போஸ்டர் ஒட்டவில்லை. தமாஸ் நடிகருக்கு மட்டும் இப்படி ஜால்ரா அடிக்கிறாங்களே என ரொம்பவே காண்டாகி விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

குட்டி வாரிசு பண்ண வேலை: தயாரிப்பாளருக்கே போன் போட்டு ஒல்லி நடிகர் என்னம்மா விஷயம் என கேட்க, தனக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாதுங்க என்றும் எல்லாத்துக்கும் காரணம் அந்த குட்டி வாரிசு தான் என பெரிய இடத்தை நோக்கி கை காட்டி விட்டு தயாரிப்பாளர் தப்பித்துக் கொண்டாராம். விவகாரம் அந்த இடத்துக்கு போன நிலையில், சொல்லவும் முடியாமல் சும்மா இருக்கவும் முடியாமல் ஒல்லி நடிகர் கடும் அப்செட்டில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அடுத்த படத்திலாவது ஒல்லி நடிகர் தமாஸ் நடிகரை முந்துவாரா? என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X