திருட்டுத்தனமாக தயாரிப்பில் ஈடுபட்ட ஜில் நடிகை.. இப்போ கடனாளியாக மாறி தவிக்கிறாராம்?
சென்னை: நம்பர் நடிகையை பார்த்து நாமும் அவரை போல மாற வேண்டும் என அந்த ஜில் நடிகை நினைத்து சூடு போட்டுக் கொண்டார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நல்லா நடிக்கிறீங்க என தொடர்ந்து குவிந்த பாராட்டுக்கள் எல்லாம் தலைக்கு ஏறிய நிலையில், நடிகையின் பாதையே தடம் தெரியாமல் மாறி விட்டதாக கூறுகின்றனர்.
சினிமாவில் ஹீரோக்களுடன் டூயட் பாடும் ஹீரோயின்களுக்கு மட்டுமே எப்போதுமே மவுசு இருக்கும் என்றும் ஹீரோக்களை கழட்டிவிட்டு நடிகைகள் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பிரச்சனைகள் வரும் என்கின்றனர்.

ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தங்கள் திறமையை நம்பியும் ரசிகர்களை நம்பியும் களத்தில் இறங்கும் நடிகைகள் காசு விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இல்லை என்றாலும் கடனில் தான் தத்தளிப்பார்கள் என்பதற்கு அந்த ஜில் நடிகை தான் உதாரணம் என்கின்றனர்.
தமாஸ் நடிகரை பார்த்து காப்பி: சில முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை பினாமி பெயர்களில் தயாரித்து சம்பாதித்து வருவதை அறிந்துக் கொண்ட தமாஸ் நடிகரும் அந்த ரூட்டை பிடிக்க அடுத்தடுத்து தனது படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், ஏகப்பட்ட கடனில் சிக்கித் தவித்தார். அவர் நன்றாக சம்பாதிக்கும் போது அவரை பார்த்து காப்பியடித்த நடிகை தானும் தனது படங்களில் மறைமுகமாக முதலீடு செய்து சிக்கலில் சிக்கிக் கொண்டதாக கூறுகின்றனர்.
தொடர் ஃபிளாப்: ஆரம்பத்தில் நடிகைக்கு கை கொடுத்த அவரது படங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் திடீரென சொதப்ப ஆரம்பித்ததும் நடிகை என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து விட்டார் என்கின்றனர். சில ஃபைனான்ஸியர்களிடம் கடனுக்கு காசு வாங்கியும், தான் சேர்த்து வைத்த சொத்துக்களை விற்றும் சில படங்களை எடுத்து வெளியிட வேண்டிய சூழல் நிலவிய நிலையில், அந்த படங்களும் படுத்து விட நடிகையின் நிலைமை படுமோசமாகி விட்டதாக கூறுகின்றனர்.
கடனில் சிக்கி தவிக்கிறாராம்: மீண்டும் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கலாம் என நடிகை போட்ட பிளானும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்கின்றனர். சில இளம் நடிகர்கள் மற்றும் பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடிகை நடிக்க காரணமே அதுதான் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிரச்சனையில் இருந்து மீள நடிகை பல்வேறு வழிகளை தேர்வு செய்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











