அந்த வயித்தெரிச்சல் தான்.. ஜில் நடிகைக்கு கிடைக்காத வாய்ப்பு.. இப்படி புலம்ப ஆரம்பிச்சிட்டாரே!
சென்னை: நல்லா நடிச்சாலும் அந்த ஜில் நடிகை படங்களை எல்லாம் தியேட்டருக்கு வந்து பார்க்க முடியாது என்றும் அதுக்கெல்லாம் அவர் வொர்த் இல்லை என்றும் ரசிகர்களே முடிவு கட்டி விட்டனர்.
முட்டி மோதி பல படங்களில் நடித்தாலும், எதுவுமே பலனளிக்காத நிலையில், முனக ஆரம்பித்து விட்டார் அந்த நடிகை.
டோலிவுட்டுக்கு சென்றும் அங்கேயும் ஒருத்தரும் இவரை மதிக்காத நிலையில், நடிக்கவே தெரியாத நடிகைகள் எல்லாம் சம்பாதிக்கிறாங்களே என்கிற வயித்தெறிச்சல் தான் தற்போது ஜில் நடிகையை போட்டு வாட்டி வதைத்து வருவதாக கூறுகின்றனர்.

ஒதுக்கிய டாப் ஹீரோக்கள்: ஒல்லி நடிகர், வி நடிகர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அந்த ஜில் நடிகை தங்கையாக அந்த தமாஸ் ஹீரோவுடன் நடித்த நிலையில், அதன் பிறகு எந்தவொரு டாப் ஹீரோவும் அந்த நடிகையை ஹீரோயின் மெட்டீரியலாக கருதவே இல்லையாம்.
அதன் காரணமாகவே லோ பட்ஜெட்டில் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த நடிகை.
எல்லாமே அட்டு ஃபிளாப்: வாரத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகுற அளவுக்கு படங்களில் தொடர்ந்து கஷ்டப்பட்டு நடிகை நடித்து வந்தாலும், தியேட்டருக்குச் சென்று அந்த நடிகையின் படங்களை பார்க்க எல்லாம் பத்து பைசா செலவு செய்ய மாட்டோம் என ரசிகர்கள் தொடர்ந்து அந்த நடிகையை டார்கெட் செய்து புறக்கணித்து வருகின்றனர்.
மேலும், தொடர்ந்து மொக்கைப் படங்களாக கொடுத்து வந்த நிலையில், அந்த நடிகை மீதான நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட முற்றிலுமாக குறைந்து விட்டது என்கின்றனர்.
நடிகைக்கு ஏற்பட்ட பொறாமை: நடிக்கத் தெரியாத நடிகைகளுக்கு எல்லாம் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பும் பல கோடி சம்பளமும் கிடைத்து வரும் நிலையில், நமக்கு மட்டும் ஏன் இப்படி நடிக்கிறது என சக நடிகைகள் மீது பொறாமைப்பட்ட அந்த நடிகை சமீபத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்.
வயித்தெரிச்சலில் நடிகை: சர்ச்சையை கிளப்பியாவது சக்சஸ் அடையலாம் என நினைத்த அந்த நடிகைக்கு சமீபத்தில் அவர் நடித்த அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்திக்க சரியான வயித்தெரிச்சலில் நடிகை சுற்றி வருவதாகவும் எப்படியாவது முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என தெரிந்த சில நடிகர்களை தனியாக சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











