அடுத்தடுத்து படங்கள் ஓடலைன்னாலும்.. சம்பளத்தை குறைக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறாராம் அந்த நடிகை?

By Staff

சென்னை: படத்தின் வசூல் உலகளவிலேயே 200 கோடி வரலைன்னாலும், சில நடிகர்கள் 100 கோடி சம்பளம் கொடுத்தே ஆகணும் என தயாரிப்பாளர்களிடம் அடம்பிடித்து வருவதை போலவே அந்த பிரபல நடிகையும் சம்பள விஷயத்தில் ரொம்பவே கறாராக இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் இணைந்து நடித்தாலும், கலராக இல்லாத காரணத்தை காட்டி நடிகைக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை மறுத்து வருகின்றனர்.

அதன் காரணமாக சோலோ ஹீரோயினாகவே சமீப காலமாக நடிகை நடித்து வரும் நிலையில், அவர் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில், நடிகையின் சம்பளத்தை குறைக்கும் படி தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனராம்.

நல்ல நடிகை

நல்ல நடிகை

நடிப்பை பொறுத்தவரையில் எந்தவொரு பிரச்சனையும் அந்த நடிகைக்கு இல்லை. சில ஹீரோக்களை விடவே சின்சியராக கொடுத்த கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் அந்த நடிகை. ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அந்த நடிகைக்கு பெரிதாக கிடைப்பதில்லை.

நம்ம ஊர் டிசைன் அப்படி

நம்ம ஊர் டிசைன் அப்படி

ஹீரோக்களை மாஸாக காட்ட ஹீரோயின் கதாபாத்திரங்களை தொடர்ந்து லூஸாகவே காட்டி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் கிளம்பி வரும் நிலையில், இந்த நடிகைக்கு கிளாமர் ரூட்டும் வராது என்பதால், அதிகமாக நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆகி வருகிறது.

கதையின் நாயகி

கதையின் நாயகி

அதன் காரணமாக தனது ரூட்டை அப்படியே மாற்றிக் கொண்டு தொடர்ந்து உமன் சென்ட்ரிக் கதைகளை தேர்ந்தெடுத்து கதையின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார். ஆனால், அவரது போதாத காலம், அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதுவுமே ரசிகர்கள் ரசிக்கும் படி இல்லாத நிலையில், படு தோல்வியை சந்தித்து வருகின்றன.

தொடர்ந்து ஃபிளாப்

தொடர்ந்து ஃபிளாப்

ஒரு படம் சொதப்பினாலும், அடுத்த படத்திலாவது ஹிட் கொடுத்து விடுவோம் என்கிற நம்பிக்கையில் ஹிட் அடித்த ரீமேக் படங்களை கூட எடுத்து நடித்துப் பார்க்கிறார். ஆனால், ஏழரை வாசலிலேயே வந்து அமர்ந்திருப்பதை போல உள்ளதால் எந்தவொரு முன்னெடுப்பும் எடுபடவில்லை. சமீபத்தில், நடிகை நடித்த அரை டஜன் படங்கள் தொடர்ந்து ஃபிளாப் ஆகி நடிகையை கடும் விரக்தியில் ஆழ்த்தி உள்ளது.

சம்பளத்தை குறைங்க

சம்பளத்தை குறைங்க

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வரும் நடிகை ஒரு சில கோடிகளை சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால், அவரை வைத்து படத்தை இயக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் ஒரு சில கோடிகளிலேயே படத்தை உருவாக்க முடிவு செய்து வரும் நிலையில், நடிகையின் சம்பளத்தை 50 முதல் 70 லட்சமாக குறைத்துக் கொள்ள கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.

அது மட்டும் முடியாது

அது மட்டும் முடியாது

தொடர்ந்து படங்கள் ஓடவில்லை என்றாலும், பரவாயில்லை. சம்பளத்தை குறைத்து விட்டால் மீண்டும் அதிகரிக்க முடியாது என்கிற மன நிலையில், இருக்கும் அந்த நடிகை அது மட்டும் முடியவே முடியாது என்றும், தனக்கான சம்பளத்தை கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்க கால்ஷீட் தருகிறேன். இல்லையென்றால், என் கால்ஷீட் கேட்டு ஏராளமான தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்கின்றனர் என திமிராக பேசி வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் நடிகையை பற்றி புகையத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X