நடிகரை காதலிக்கவே இல்லை: வாய் கூசாமல் பொய் சொல்லும் நடிகை
சென்னை: நடிகை ஒருவர் ஓவராக சொன்ன பொய் தான் திரையுலகினரை சிரிக்க வைத்துள்ளது.
நல்லா நடிக்கத் தெரிந்த அழகான நடிகை அவர். அவரை நம்பி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் அழகாக நடித்துக் கொடுப்பார். அவர் நடிப்பில் அண்மையில் வந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஹீரோவை தாண்டி அம்மணியின் நடிப்பு பற்றியும் அதிகம் பேசப்படுகிறது.

நடிகர்
அம்மணியும், வாரிசு நடிகர் ஒருவரும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தார்கள் என்று திரையுலகினர் பேசிக் கொண்டனர். அதற்கு சாட்சியாக சில புகைப்படங்களும் வெளியாகின.

நடிகை
நடிகரும், நடிகையும் இடையில் பிரிந்துவிட்டனர். பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்ததுடன் சமூக வலைதளங்களில் கூட கொஞ்சிக் கொண்டார்கள். இந்நிலையில் தான் நடிகை அவரை பிரிந்து தொழில் அதிபரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

பொய்
வாரிசு நடிகரை காதலிக்கவே இல்லை என்று நடிகை ஒரே போடாக போட்டுள்ளார். நடிகருடன் காதல் என்று வெளியான செய்திகளை பார்த்து ஆரம்பத்தில் அழுதாராம். அதன் பிறகு பழகிவிட்டதாம். இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறாரே நடிகை என்று உண்மை தெரிந்தவர்கள் சிரிக்கிறார்கள்.

வாழ்வே மாயம்
நடிகை தன்னை பிரிந்த அந்த நடிகர் வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்று சோக கீதம் பாடிக் கொண்டிருக்கிறார். காதல் தோல்வியை அடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். ஆனால் நடிகையோ காதலிக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











