படுத்து தூங்கும் மார்க்கெட்: அட்ஜஸ்ட் செய்துவிட்டு சமாளிக்கும் நடிகை

By Siva

சென்னை: செவத்தப் புள்ள நடிகை தன்னுடைய மார்க்கெட் நிலவரம் சரியில்லாததால் கொள்கையை தளர்த்திவிட்டார்.

செவத்தப் புள்ள நடிகை தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அழகும், திறமையும் கொட்டிக் கிடக்கிறது. அவர் டான்ஸ் ஆடினால் அதை பார்த்து ஹீரோக்கள் எல்லாம் அதிர்ந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு அருமையாக டான்ஸ் ஆடுவார்.

அவருடன் சேர்ந்து நடனம் ஆடுவது என்றால் பல ஹீரோக்களுக்கு பயமாக இருக்கும். நடிப்பிலும் ரொம்பவே தேறிவிட்டார் என்றே கூற வேண்டும்.

போராட்டம்

போராட்டம்

அந்த நடிகையின் மார்க்கெட் நிலவரம் சரியில்லை. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படத்தை பார்த்தவர்கள் அவரின் நடிப்பை பார்த்து ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தார்கள். ஆனால் அதனால் அவரது மார்க்கெட் பிக்கப் ஆகவில்லை. இந்நிலையில் தான் அவர் தனது கொள்கையை தளர்த்தியுள்ளார்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

அம்மணிக்கு பாலிவுட் படம் ஒன்றில் வில்லன் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சற்றும் யோசிக்காமல் சரி என்று கூறிவிட்டார். என்னம்மு, அந்த ஆளுக்கு போய் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பவர்களிடம், என் கதாபாத்திரம் வெயிட்டானது, கதை மாஸாக உள்ளது, அதனால் தான் என்கிறார். மார்க்கெட் சரி இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாதே.

பாராட்டு

பாராட்டு

நடிகை முன்னர் நடித்த பாலிவுட் படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படம் கை கொடுத்தால் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரும் ஆசையும் உள்ளது அவருக்கு. எல்லாம் இந்த புதுப்படத்தின் வெற்றியை பொறுத்து தான் உள்ளது. அவரின் நடிப்பையும், அழகையும் பாராட்டும் பாலிவுட்காரர்கள் வாய்ப்பு மட்டும் சரியாக கொடுப்பது இல்லை.

வெற்றி

வெற்றி

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த ஒரு நடிகை பாலிவுட் சென்று பெரிய ஆளாகிவிட்டார். அவர் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடாமல் வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். அவரை பார்த்துவிட்டு தான் செவத்தப்புள்ள நடிகையும் ரூட்டை மாற்றிப் பார்க்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X