பாட்டு நடிகையை பஞ்சர் ஆக்கிட்டாங்க.. 3 பொண்டாட்டிக்காரர் கூட சேர்ந்ததன் விளைவு தானா?
சென்னை: பெரிய பெரிய பட வாய்ப்புகள் வருதேன்னு பாட்டு நடிகை ஒரு நிமிஷம் எதையுமே யோசிக்காமல் பாலிவுட்டுக்கு பறந்துச் சென்ற நிலையில், அங்கே உள்ள நெபோடிசம் க்ரூப் அம்மணியை மொத்தமாக டேமேஜ் பண்ணி அனுப்பிட்டாங்க என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
ஏற்கனவே அந்த 3 பொண்டாட்டிக்காரர் எதை தொட்டாலும் உருப்பட மாட்டுது என பேசி கலாய்த்து வரும் நிலையில், நடிகையின் நிலைமையும் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது என்கின்றனர்.

புராண படத்தை மட்டுமே பண்ணி ஓபனிங் கொடுத்திருந்தால் கூட இந்தளவுக்கு இமேஜ் டேமேஜ் ஆகியிருக்காது என்றும் தற்போது அந்த படத்தில் உள்ளவர்களும் நடிகயை ஏளனமாக பார்க்கும் நிலை உருவாகி விட்டது என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
தலைவிரித்தாடும் நெப்போடிசம்: நல்லா நடிக்கக் கூட வேண்டாம், அட்லீஸ்ட் டான்ஸ் ஆடக்கூடா தெரியாத நெப்போடிசம் பீஸ்களை வைத்து பாலிவுட்டில் உருட்டிக் கொண்டிருக்கும் நிலையில், நல்லா நடிக்கத் தெரிந்த நடிகையான பாட்டு நடிகைக்கு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்த நிலையில், நெப்போடிச நடிகைகள் எல்லாம் இவரது வரவு பிடிக்காமல் ஏகப்பட்ட பிரச்னைகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்கின்றனர்.
3 பொண்டாட்டிக்காரர் பண்ண சம்பவம்: புராண படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தால் தெய்வமாக நடிகையை வணங்கும் அளவுக்கு முதல் படத்திலேயே பில்டப் கிடைத்திருக்கும் என்றும் ஆனால், அதனை 3 பொண்டாட்டிக்காரர் அவசரமாக சுட்ட ஆஃப் பாயில் காரணமாக மொத்த சோலியும் முடிந்து விட்டது என பேச்சுக்கள் எல்லை மீறி செல்வதாக கூறுகின்றனர்.
மதிப்பே போச்சு: முதல் படமே தோல்வி என்றால் அதன் பின்னர் ஒரு இண்டஸ்ட்ரியில் அந்த நடிகையை மற்றவர்கள் சீண்டக் கூட மாட்டார்கள் என்கின்றனர். இந்நிலையில், புராண பட செட்டிலும் நடிகைக்கு இதுநாள் இருந்த மதிப்பே போய்விட்டது என்றும் அந்த படம் ஃப்ளாப் ஆக காரணமே நடிகை தானா? அவர் காட்சிகளை எந்தவொரு மிஸ்டேக்கும் இல்லாமல் மெருகேற்றுவது எப்படி என படக்குழு மும்முரம் காட்டி வருவது நடிகையை மனதளவில் ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
ஒல்லி நடிகருக்கும் கஷ்டம்: ஏற்கனவே ஒரு ஃப்ளாப் குயின் வண்டியில் டிராவல் செய்து வரும் நிலையில், பாட்டு நடிகையை தான் ஒல்லி நடிகரும் தனது அடுத்த படத்துக்கு ரொம்பவே நம்பிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவருக்கும் லேசா பயம் வந்துவிட்டது என்கின்றனர். அடுத்த படமும் அவருக்கு அம்பேல் ஆனால் அம்போ தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications